தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகாகன கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய புதிய திட்டம் வகுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரம்: ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத்: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான வழக்கில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை … Read more

பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் உரையாற்றியது தமிழகத்தில் 16 கோயில்களில் ஒளிபரப்பானது. இதன்படி ரங்கராஜன் நரசிம்மன் என்பவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா?: ஐகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி

சென்னை: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி கேள்வி எழுப்பியுள்ளார். பல கோயில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சியளிக்கிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவது மதரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைப்பு

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து எய்ம்ஸ்  மருத்துவக் குழுவை அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமகையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த … Read more

ஆஸ்கர் திரைப்பட விழாவில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை

லாஸ்ஏஞ்செல்ஸ்: ஆஸ்கர் திரைப்பட விழாவில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை. லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மார்ச் 27-ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்போர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.28 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிமுக வேட்பாளர் தற்கொலை : காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது : 623 வேட்பாளர்கள் களத்தில்!

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜ தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த முறை இம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜ, இந்த முறை 234 இடங்களை … Read more