பிப்-10: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

விவசாய கடன்கள் தள்ளுபடி கொரோனாவில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம்: உபி.யில் காங். வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சட்டீஸ்கரை போன்று விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இன்று தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. லக்னோவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் … Read more

ஹீரோவுடன் நெருக்கமான காட்சி கணவர் ஒப்புதல் தந்தாரா? தீபிகா ஆவேசம்

மும்பை: ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவர் ரன்வீர் சிங் ஒப்புதல் தந்தாரா என்ற மீடியாவின் கேள்வியால் கோபம் அடைந்தார் தீபிகா படுகோன். தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ள இந்தி படம் கெஹ்ராய்யான். இந்த படம் நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. இதில் சித்தாந்துடன் நெருக்கமான காட்சிகளில் படு கவர்ச்சியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இதுவரை அவர் எந்த படத்தில் இப்படி நடித்ததில்லை. இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற காட்சியில் நடிக்க கணவர் … Read more

தேவையற்ற கிரகங்கள் விலகியது நல்ல சகுனம்: பாஜவை தாக்கிய ஓ.எஸ்.மணியன்

திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி  ஸ்ரீரங்கம் கோட்டத்தில் முதல் 7 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் ஸ்ரீரங்கம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.திருச்சி  மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேட்பாளர்களை  அறிமுகப்படுத்தி பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறாத நிலையில், இத்தேர்தலில் முழு வெற்றி பெற்று வரலாறு  படைக்க வேண்டும். ஜாதகத்தில் தேவையில்லாத இடங்களில் தேவையில்லாத கிரகங்கள்  இருப்பது ஆகாது. அதுபோன்று நம்மிடம் இருந்த … Read more

ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்: இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்ககோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் மாற்றி உத்தரவிட்டார். இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்து கடந்த 5ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி மாணவிகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதி பொது விடுமுறை அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, சாதாரண தேர்தல் நடைபெற உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.

பொருளாதார வழித்தடம் குறித்த சீனா-பாக். கூட்டறிக்கையில் மீண்டும் காஷ்மீர் சர்ச்சை: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பொருளாதார வழித்தடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதாக குறிப்பிட்ட சீனா – பாகிஸ்தானின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்காக சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. ஆனால், பொருளாதார வழித்தடம் குறித்து சீனா – பாகிஸ்தான் வெளியிடும் எந்தவொரு கூட்டறிக்கையிலும் இதை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறாமல் ஜம்மு காஷ்மீர் என்று கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில், பீஜிங்கில் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; இம்மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19.02.2022 அன்று பொதுவிடுமுறை  அறிவிக்கப்படுகிறது. … Read more

போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக புகார்; ஆளுநரை பதவியில் இருந்து நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அம்மாநில ஆளுநரை பதவியில் நீக்கக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப்  தன்கருக்கும் இடையே முட்டல் மோதல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளை ஆளுநர் மிரட்டுவதாக குற்றம்சாட்டிய முதல்வர் மம்தா  பானர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநரை பின்தொடர்வதில் இருந்து  வெளியேறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஆளுநர்,  ‘மாநிலத்தின் … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய  அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரங்களில் ஆல் அவுட் ஆனதால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.