'ஜெய் ஸ்ரீராம்' என்றோ, 'அல்லாஹ் அக்பர்' என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் பேச்சு

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பர்தா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவி முஸ்கானை, காவி துண்டுகள் அணிந்த‌ ஏபிவிபி … Read more

பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும்: மக்களவையில் பாரிவேந்தர் வலியுறுத்தல்

டெல்லி: பெரம்பலூர் பச்சைமலை பகுதியில் சைனிக் பள்ளி அமைக்க வேண்டும் என மக்களவையில் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார். பச்சைமலையில் சைனிக் பள்ளி அமைத்து அப்பகுதி மக்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க நடவடிக்கை தேவை என பாரிவேந்தர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவு

சென்னை: இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சாதியில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

11 வயது சிறுமி பலாத்கார வழக்கு; தாய், கள்ளக்காதலனுக்கு 20 வருடம் கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநில் பத்தனம்திட்டா அருகே 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த தாய் ஆகியோருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை  விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை ேசர்ந்தவர் ரிஜா (31, பெயர் மாற்றம்). இவருக்கு 11 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். கணவனை விவாகரத்து செய்தவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவாகரத்தான அஜி அச்சுதனுக்கும் (46) இடையே … Read more

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆட்சியர் பரிந்துரை செய்யலாம், நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்கே அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெத்தேல் நகர் குடியிருப்போர் நலசங்கம் தொடுத்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 655 என்கவுன்டர்கள்; தமிழகத்தில் மட்டும் 14: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 655 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 14 என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை காவல்துறை செய்த என்கவுன்டர்களின் எண்ணிக்கை குறித்தும், என்கவுன்டர்களுக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து வரும் வழக்குகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சக இணையமைச்சர் நித்யானந்த ராய், தேசிய … Read more

கடந்த 3 ஆண்டில் 3407 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.18 ஆயிரத்து 731 கோடி செலவிடப்பட்டுள்ளது: நிதின் கட்கரி

சென்னை: கடந்த 3 ஆண்டில் 3407 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு ரூ.18 ஆயிரத்து 731 கோடி செலவிடப்பட்டுள்ளது என நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 2,215 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போது 1,191 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கட்கரி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை!: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஒன்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவிய காலகட்டத்தில் வேலை இழப்பும் அதிகரித்தது. வேலை போய்விடுமோ என்ற கவலையில் பலரும் தற்கொலை செய்துகொண்டனர். கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் பல மூடியதன் காரணமாக பலரும் வேலை கிடைக்காமல் தள்ளாடினர். இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற … Read more

நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

சென்னை: நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு மறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று விரைந்து வினைப்படுகிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எனவும் வைரமுத்து பாராட்டியுள்ளார்.