கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு அல்லாஹு அக்பர் என்று சிங்கம் போல் கர்ஜித்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவித்துண்டு அணிந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு மத்தியில் அல்லாஹு அஃபர் என இஸ்லாமிய மாணவி துணிச்சலாக பதில் முழக்கமிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மாண்டியாவில் உள்ள பி.ஈ.எஸ். கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக இந்து அமைப்பு மாணவர்கள் காவித்துண்டு போராட்டம் நடத்தி கொண்டிருந்திருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் … Read more

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. 2017 முதல் விசாரித்த சிபிஐயால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறையை பயன்படுத்தி பாஜக அரசு அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து அவையில் பேச வேண்டும் : மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!!

மும்பை : அமலாக்கத்துறையை பயன்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து இருப்பதாகவும் மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியை கலைக்க ஒத்துழைக்குமாறு சிலர் தன்னை அணுகியதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்ஜய் ராவத் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிவசேனா எம்பிக்கள், முன்னணிநிர்வாகிகள் நிர்வாகிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி துன்புறுத்துவது அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 10, 17 ஆகிய … Read more

கர்நாடக நிலைமை தமிழ்நாட்டுக்கும் வந்துவிட கூடாது : கமல் ஹாசன் எச்சரிக்கை!

சென்னை : மக்கள் நீதி மய்ய தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் :ஒன்றிய அரசு

டெல்லி : உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

மன்னார்குடி பிரபல தையல் கடையில் பயங்கர தீ விபத்து

திருவாரூர் : மன்னார்குடி பெரியகடை வீதியில் உள்ள பிரபல குட்வில் தையல் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தையல் கடையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

மேகதாது விவகாரம் பற்றி டெல்லியில் கர்நாடகா முதல்வர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என ஒன்றிய அரசு கூறியதை தொடர்ந்து, டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கர்நாடகா முதல்வர் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், ‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,780,757 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57.80 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,780,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 400,265,695 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 320,296,701 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 90,187 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் பற்றி பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் சர்ச்சை கருத்து : ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹூண்டாய் கார் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் தென் கொரிய அரசும் வருத்தம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த பிரபல ஹூண்டாய் கார் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்தில் ஆதரவாக இருப்போம்’ … Read more

ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்பருத்திகுன்றம், கீழ்கதிர்பூர் ஆகிய ஊராட்சிகளில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆர்த்தி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.அப்போது அவர், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டு, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.