பொற்காலத்தில் நுழைந்திருக்கிறது இந்தியா 130 கோடி மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘நாட்டின் 130 கோடி மக்களின் திறன் மீது நம்பிக்கை வைத்திருங்கள். அவர்களின் திறமையால் நாடு இப்போது பொற்காலத்திற்குள் நுழைந்திருக்கிறது’ என மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்து நேற்று முன்தினம் பேசினார். அப்போது, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி பேசினார். இங்கும் … Read more

4 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை

சென்னை: 4 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கே.மாதவராமானுஜம், மணிமாளிகை எம்.கணேசன், செ.பாலசுப்பிரமணியன், பி.விஜி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த என்.கரிகாலன்(எ)ரமேஷ், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நகர செயலாளர் எம்.அங்குசாமி, டி.ஆர்.சீனிவாசன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி பொதுக்குழு உறுப்பினர் … Read more

மகாபாரதத்தில் பீமனாக நடித்த பிரவீன் குமார் காலமானார்

மும்பை: பிரபல நடிகரும், அர்ஜுனா விருது வென்ற விளையாட்டு வீரருமான பிரவீன் குமார் சோப்தி காலமானார். அவருக்கு வயது 74. பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் சீரியலில் பீமனாக நடித்த பிரவீன் குமார் சோப்தி சர்வதேச அளவில் புகழ் அடைந்தார். அந்த தொடருக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாடிகார்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ‘‘பீம் பாய்… … Read more

பாகுபலி பாடகர் திருமணம்

சென்னை: தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெற்ற ‘மனோகரி’என்ற பாடலைப் பாடியிருந்தவர், எல்.வி.ரேவந்த். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா என்ற படத்திலும் பாடியுள்ளார். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் எல்.வி.ரேவந்த், தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்திலும் பாடியிருந்தார். அவருக்கும், அன்விதா என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடைய திருமணம் ஆந்திர மாநிலத்தில் எளியமுறையில் நடந்தது.

நீர்நிலைகளை நிர்மூலமாக்கும் ஆகாய தாமரையில் புடவை தயாரிப்பு: ஜார்கண்டில் புதிய முயற்சி

ஜம்ஷெட்பூர்:  ஜார்கண்ட் மாநிலத்தில் ஆகாய தாமரை செடிகள் தற்போது புடவைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகாய தாமரை  ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இந்த செடிகள் நீரை ஆவியாக்கும் தன்மை கொண்்டவை. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரத்தின் வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலமாக தொடர்ந்து நீர் நிலைகளில் முழுவதுமாக பரவி விடுகின்றது. மிக கனமான, பசுமையான இலைகளை கொண்ட ஆகாய தாமரையின் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த செடிகள் தண்ணீரை எளிதில் … Read more

பிப்ரவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: பிப்ரவரி 17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: ஹிஜாப் விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது; மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகள் கழித்து பாஜக தற்போது தனித்து களம் காண்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின்  திட்டம் சென்று சேர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மேலும் 29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்; கேரளாவில் மேலும் 29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு 2.83 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி; எம்.எல்.ஏ. ரோஜா

சித்தூர்: சித்தூர் தமிழ் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் புத்தகங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா தெரிவித்துள்ளார். கோரிக்கையை மின்னலை விட வேகமாக நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.