திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ரதசப்தமி; தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி நாளான இன்று காலை முதல் இரவு வரை 7 வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9 நாட்கள் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தாயார்களுடன் 16 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல் ஆண்டுதோறும் ரதசப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில்  மலையப்பசுவாமி எழுந்தருளி மாடவீதியில் வலம் வருவார். இதனை ‘மினி பிரம்மோற்சவம்’ என அழைப்பார்கள்.   அதன்படி இந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் பரப்புரையை தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூரில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கியுள்ளார். நீட் தேர்வு எழுத லட்ச கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற ஏழை, எளிய மாணவர்களால் முடியாது. பணமும் வசதி படைத்தவர்களுக்கு கொண்டுவரப்பட்டது தான் நீட் தேர்வு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வை தலையாட்டி ஏற்றுக்கொண்டுவிட்டால், பொறியியல் கல்லூரிகளுக்கும் அதை கொண்டு வருவார்கள் என முதல்வர் கூறினார்.

டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும்: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: 10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும். டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம் எனவும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறதா? ஒருவேளை பத்து ரூபாய் நாணயங்கள் வணிகர்களால் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 10 … Read more

தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும்: மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்.10-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கூறினார்.

ஓவியரான அனுபமா

ஓவியரான அனுபமா 2/8/2022 2:31:04 PM பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை.  தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தள்ளிப்போகாதே படத்தில் நடித்தார். இப்போது தலைநகரம் 2வில் நடித்து வருகிறார். அனுபமா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். வழக்கமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது தான் வரைந்த ஓவியங்களை வெளியிட்டு வருகிறார். ஓவியம் வரையும் … Read more

ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

டெல்லி: ஹூண்டாய் சர்ச்சை பதிவிற்காக தென்கொரிய தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் சர்ச்சை ட்வீட் பதிவிட்டிருந்தார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரியவந்தால் அரசுக்குத்தான் சிக்கல். அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றுதலில் இந்து கோயில்களை மட்டும் இடிப்பதாக இந்து முன்னணி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

மாநாடு கணக்கு வரவில்லை: தயாரிப்பாளர் வேதனை

மாநாடு கணக்கு வரவில்லை: தயாரிப்பாளர் வேதனை 2/8/2022 2:28:04 PM வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் வெளியாகி 75 நாட்கள் வரவில்லை. படம் பலகோடி வசூல் சாதனை என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் படத்தின் வசூல் கணக்கை கூட இன்னும் காட்டவில்லை. என்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று 75வது நாள் ‘மாநாடு’. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் … Read more

சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி சாடல்..!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நூறாண்டுகளில் மனிதகுலம் கொரோனாபோன்ற ஒரு தொற்று நோயை பார்த்ததில்லை. கொரோனா பரவ துவங்கிய போது, இந்தியாவில் என்ன ஆகும், இதனால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னம்பிக்கை மற்றும் 130 கோடி இந்தியர்களின் முயற்சியால், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது. பெருந்தொற்று காலத்தில், இந்தியா தலைமைப்பண்புடன் செயல்பட்டது. … Read more

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற போக்கில் நீட் விலக்கு மசோதாவை திமுக அரசு கொண்டு வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். நீட் தேர்வு வானத்தில் இருந்த குதித்துவிடவில்லை என கூறினார். பாஜகவை தவிர எஞ்சிய அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதா செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியானவை அல்ல என கூறினார்.