உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள்  இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல: சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேச்சு

சென்னை: நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல என சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என கூறினார்.

பிப்.10ல் சட்டமன்ற தேர்தல்!: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு.. உ.பி.யில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம்..!!

லக்னோ: நாளை மறுநாள் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில், இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளியாக சுயன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். 403 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், பரப்புரை இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாதி, … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னை மாநகராட்சியில் 2,670 பேர் போட்டி!!

சென்னை : சென்னை மாநகராட்சியில் 2670 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2670 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,  வேட்புமனு தாக்கல் செய்த 3546 பேரில் 633 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். இதில் 243 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

தஞ்சை : தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிப்-08: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச … Read more

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா; தமிழக மீனவர்கள் பங்கேற்க நடவடிக்ைக: இலங்கை அமைச்சர் உறுதி

புதுடெல்லி: வரும் மார்ச் மாதம் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்த ஆண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் இலங்கை மீனவர்களை போல தமிழக மீனவர்களும் குறைந்த பட்ச அளவில் பங்கேற்க அனுமதி வழங்கி தரக்கோரி மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த 4ம் தேதி  கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘இலங்கை … Read more

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் விவகாரம்; சிபிசிஐடி விசாரணை நிலை குறித்த அறிக்கை தர உத்தரவு

புதுடெல்லி: வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு தங்கம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவரது மகன் சதீஷ்குமார்(24). இவர் கடந்த 2011ல் மாயமானார். அவரது உடல் அதே ஆண்டு ஜூலை 13ம் தேதி சென்னை ஐ.சி.எப் வடக்கு காலனி ஏரியில் மீட்கப்பட்டது. சதீஷ்குமாரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு பிளேடுகள் மற்றும் … Read more

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச … Read more