நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி தொடங்கியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி தொடங்கியது. ஒரே சின்னத்தை 2 வேட்பாளர்கள் கேட்கும் போது குழுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு!: விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட விசாரணைக்குழு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்துவிட்டு சாலை மார்க்கமாக சென்ற பிரதமரின் வாகனம் போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டது. இதனால் பயணம் ரத்து செய்யப்பட்டது. பிரதமரின் வருகை, திட்டம் … Read more

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

'இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் சொத்து வாங்கமாட்டேன்'!: பஞ்சாப் காங். முதலமைச்சர் வேட்பாளர் சரண்ஜித் சிங் அறிவிப்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்‍கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று முதல் தமது பெயரிலும், தமது மனைவி பெயரிலும் எவ்வித சொத்தும் வாங்கப்போவதில்லை என்றும் எந்த தொழிலும் செய்யப்போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.1 17 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்‍கான தேர்தல் வரும் 20ம் தேதி … Read more

மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயம்

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி சென்றபோது 2 வேன்கள் கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்னை – திருச்சி காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆந்திராவில் நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

ஹைதரபாத் :  ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டத்தில் உருவகொண்டா அருகே திருமண நிகழ்வில் கலந்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தவர்களின் இன்னோவா கார் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ … Read more

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் தொடங்கியது

காரைநகர்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் தொடங்கியுள்ளது. அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரைநகரில் ஏலம் விடுவது தொடங்கியது.

பஞ்சாப் காங். முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் விலகல்: சட்டப்பேரவை தேர்தலில் காங். முதல்வர் வேட்பாளராக சன்னி அறிவிப்பால் அதிருப்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளார். சன்னியின் பெயரையே நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்தபோது, மேடையில் சுனில் ஜாக்கர் இருந்தார். பின்னர் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தங்கள் கட்சியில் டெல்லியில் உட்கார்ந்திருக்கும் சிலர், பஞ்சாபில் சீக்கியர் மட்டுமே முதல்வராக வேண்டும் என கட்சி தலைமைக்கு ஆலோசனை … Read more

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது : ஈபிஎஸ் ட்வீட்!!

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் இசைக்குயில், பல கோடி மக்களை தன் காந்த குரலால் கவர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் ஆன்மா இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்,அவர் உடலால் மறைந்தாலும் தனது பாடல்களால் பூமி உள்ளளவும் வாழ்வார்’ என்று பதிவிட்டுள்ளார்.இதனிடையே லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை

டெல்லி : மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசுகிறார்.அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் அவர் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.