பிப்-07: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பிரசார கூட்டங்கள் கட்டுப்பாடு தளர்வு

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொதுவெளி பிரசார பொதுக் கூட்டங்களில் 30 சதவீதம் பேரும், உள்ளரங்க பிரசாரத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேரும் பங்கேற்கலாம். … Read more

அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பொம்மை இன்று டெல்லி பயணம்: மேலிட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவர் பதவியேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் முழு அளவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த முறை அமைச்சர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மூத்த பாஜ எம்எல்ஏக்கள் முயன்று வருகின்றனர். இதற்காக தங்களுக்கு நெருங்கிய பழக்கமுள்ள தலைவர்களை சந்தித்து லாபியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாரிய, … Read more

துபாயில் இருந்து கேரளா திரும்பிய முதல்வர் பினராய்க்கு பாஜ கருப்புக்கொடி

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் சிகிச்சைக்காக 3 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவியும் சென்றார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்த பின்னர் கடந்த மாத இறுதியில் அவர் கேரளா திரும்புவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், திடீரென அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து நேராக அவர் துபாய் புறப்பட்டு சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்நிலையில், நேற்று மதியம் அவர் துபாயில் … Read more

மண்டியா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேர் வெட்டி படுகொலை: பணத்துக்காக கொலை நடந்ததா? போலீசார் விசாரணை

மண்டியா: மண்டியா மாவட்டத்தில் குஜராத் மாநிலத்தை குழந்தைகள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கங்காராம், துணி வியாபாரம் செய்து வருகிறார். மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் தாலுகாவிலுள்ள கேஆர்எஸ் பஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்துள்ளார். துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திற்கு கங்காராம் மற்றும் அவரின் சகோதரர் செல்வது வழக்கமாகும். கடந்த 3 நாள் முன்பு கங்காராம், ஆந்திராவுக்கு … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் எம்பி மன்னிப்பு கேட்க வேண்டும்: முன்னாள் எம்பி கண்டனம்

அகமதாபாத்: மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் எம்பி கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, கடந்த 3ம் தேதி மக்களவையில் பேசும்போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் தெருக்களில் அசைவ உணவுகள் விற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும், ஜெயின் சமூகம் குறித்தும் பேசினார். இவரது பேச்சு ெபரும் சர்ச்சை பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில், சகல் ஜெயின் சமாஜ் அமைப்பின் தலைவரும், முன்னாள் … Read more

இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 176 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி

அகமதாபாத்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இண்டீஸ் அணி. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

தேர்தல் ரிசல்ட் நாளான மார்ச் 7ம் தேதி மோடியையும், யோகியையும் அடக்கம் செய்வோம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங். வேட்பாளர் மீது தேசதுரோக வழக்கு

லக்னோ: வாக்கு எண்ணிக்கை நாளான மார்ச் 7ம் தேதி மோடியையும், யோகியையும் அடக்கம் செய்வோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிந்த்ரா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய் ராய் என்பவர் போட்டியிடுகிறார். அவர் ராஜேதாரா கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்த போது, தேர்தல் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘காங்கிரஸ் … Read more

1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

அகமதாபாத்: 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு … Read more

முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது..!

மும்பை: முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் இசைக்குயில் என்று அழைக்கப்பட்டவருமான லதா மங்கேஷ்கர் (92), கடந்த 29 நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா, நிமோனியா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததால், நேற்றிரவு முதல் அரசியல், பாலிவுட் … Read more