பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதினியாவில் நடைபெற்ற காணொலி பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்தார்.

திருமலையிலிருந்து ஸ்ரீவாரி பாதம் செல்ல அரசு பஸ் சேவை இன்று தொடங்கியது

திருமலை: திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு இன்று முதல் பஸ் சேவை தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் உள்ள பாபவிநாச தீர்த்தம், அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் உள்ள அஞ்சனாதேவி-பால ஆஞ்சநேயர் சுவாமி கோயில், ஆகாச கங்கை, ஜாபாலி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஆந்திர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலை உச்சியில் … Read more

மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

மும்பை: மும்பை பிரபுகஞ்சில் இருந்து மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. லதா மங்கேஷ்கர் உடல் ராணுவ வாகனத்தில் வைத்து சிவாஜி பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

செய்தி சேகரிக்க சென்ற போது கண்ணிவெடியில் சிக்கி பத்திரிகையாளர் பலி: ஒடிசாவில் நக்சல் கும்பல் அட்டூழியம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தில் இம்மாத இறுதியில் ஐந்து கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நக்சல் கும்பல் ஊடுருவிய மலைக் கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க புவனேஸ்வரில் இருந்து வெளியாகும் முன்னணி ஒடியா நாளிதழின் நிருபர் ரோஹித் குமார் பிஸ்வால் என்பவர், கலாஹண்டி மாவட்டத்தின் கர்லகுண்டா பாலம் பகுதிக்கு சென்றார். அப்போது … Read more

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

அகமதாபாத்; மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் தீபக் ஹூடா அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

வாவா சுரேஷ் நாளை டிஸ்சார்ஜ்

திருவனந்தபுரம்: பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை தியாகரய நகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டத்தில் சிக்கிக்கொண்ட கொண்ட 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிப்பு; இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் … Read more

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். பல்வேறு மொழிகளில் தனது மெல்லிய குரலில் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையம் தொட்டுள்ளார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு; நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும்.! ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் … Read more