நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதே மக்களுக்கு எங்கள் வாக்குறுதி. நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஆளுநரை ஆதரிக்கும் போக்காகவே பார்க்க முடிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 29 நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா விதிகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை அதிகரிக்க தொடங்கியபோது, தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்புகள் அதிகளவில் பதிவானது. இதனால், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் … Read more

பிப்-06: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் தலைமறைவு வாழ்க்கை; 29 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினான்; மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி: இந்திய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதியை ஐக்கிய அரசு அமீரகத்தில் இந்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இவனை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் கடந்த 1993ம் ஆண்டு ஒரே நேரத்தில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. இந்த … Read more

மகனுக்கு கட்சித் தலைவர் பதவியா? அப்படி சொல்றவன் எல்லாம் முட்டாள்கள்: லாலு பிரசாத் யாதவ் ஆவேசம்

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, முன்பு போல் அவரால் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை. அவருடைய இளைய  மகன் தேஜஸ்வி யாதவ்தான், கட்சி பொறுப்புகளை இப்போது கவனித்து வருகிறார்.இந்நிலையில், இக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது. இதில், கட்சியின் தேசிய தலைவராக லாலுவுக்கு பதிலாக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ‘அப்படி … Read more

இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

ஆன்டிகுவா: யு-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்திய அணி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

‘ஜி 23’ குழுவை சேர்ந்தவர்கள் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மணீஷ் திவாரி, குலாம் நபி நீக்கம்: காங்கிரஸ் தலைமை திடீர் நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான திருத்தப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த மூத்த தலைவர்கள் மணீஷ் திவாரி, குலாம் நபி ஆசாத் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப்பின் அனந்த்பூர் சாகிப் தொகுதி காங்கிரஸ் எம்பியாக மணீஷ் திவாரி ஆவார். சமீபத்தில் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து, கட்சியின் 23 … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்.12ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.