'டிஜிட்டல் விவசாயமே நாட்டின் எதிர்காலம்'!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும்; இதன்மூலம் இளைஞர்கள் சிறப்பான பணிகளைச் செய்ய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு ஒன்றிய பட்ஜெட்டில் இயற்கை மற்றும் டிஜிட்டல் விவசாயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரம்!: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் நீதிபதி ஆணை..!!

சென்னை: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் ஆணையிட்டுள்ளார். ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கினை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருவள்ளுவர் தாலுகா காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ம.பி.யைச் சேர்ந்த விஜய் பாஹீல் எம்.பி.யின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., குவைத், சூடான், மலேசியா, சிங்கப்பூரிலும் இந்திய தொழிலாளர்கள் விபத்துகளில் பலியாகியுள்ளனர். இதேபோல், பஹ்ரைன், ஓமன், அஜர்பைஜான், போர்ச்சுகல், ஈராக், மொரிஷியஸ், ருமேனியா நாடுகளிலும் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக கத்தார் … Read more

'பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளனர்': மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளதாகவும், இத்தகவலை பாகிஸ்தான் மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

புதுச்சேரி ஜிப்மரில் பிப்.7ம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு மீண்டும் செயல்படும் என அறிவிப்பு..!!

புதுச்சேரி: பிப்ரவரி 7ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்படும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறைவதால் வழக்கம் போல் சிகிச்சை பிரிவுகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதியை விரைவில் சபாநாயகர் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் 9ஆம் தேதி கூட்டத்தை கூட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம்

காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் மற்றும் உ.பி.யின் நொய்டாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக காஷ்மீர், நொய்டாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம்

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகியதை தொடர்ந்து ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டார்.

ஐதராபாத் முச்சிந்தலில் ரூ. 1,000 கோடியில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி

தெலங்கானா: ஐதராபாத் முச்சிந்தலில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். சின்னஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கரில் ரூ. 1,000 கோடியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பஞ்சலோக சிலை திறப்பு. வைணவ ஆச்சாரியர் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் சிலை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி மாலை மணிக்கு திறந்து வைக்க உள்ள ராமானுஜர் சிலை சமத்துவ சிலை என அழைக்கப்படுகிறது. சிலை திறப்பிற்கான பூஜையில் தமிழகம், … Read more

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியா கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அரும்பாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.