லாஜிக் இல்லாத தென்னிந்திய படங்கள்: ராகுல் தேவ் விமர்சனம்

மும்பை: பாலிவுட் வில்லன் நடிகர் ராகுல் தேவ். விஜயகாந்தின் ‘நரசிம்மா’, லாரன்ஸின் ‘முனி’, சூர்யாவின் ‘ஆதவன்’, அஜித்தின் ‘வேதாளம்’, சரவணனின் ‘லெஜெண்ட்’ உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் பாலிவுட்டை விட தென்னிந்திய …

கொல்லிமலை அடிவாரத்தில் வேடன் வடிவில் அருள்பாலிக்கும் கூவை மலை பழனியாண்டவர்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கிறது புராணங்கள் போற்றிய கூவைமலை பழனியாண்டவர் கோயில். மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனை போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சியளிப்பது வியப்பு. தலையில் கொண்டையும், வேங்கைமலர் கிரீடமும், கொன்றை மலரும் சூடிய முருகன், ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். காலில் காலணியும், வீரத்தண்டையும் அணிந்துள்ள முருகன், இடுப்பில் கத்தியும் … Read more

ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஒட்டுமொத்த இந்தியாவை இணையத்தால் இணைத்துள்ளோம், சமூக நீதி நம்மை இணைத்துள்ளது என சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாட்டில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது: பிரதமர் மோடி தமிழில் கடிதம்

டெல்லி: காசி – தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த யோகதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது. காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பையும், அக்கறையையும் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளத்தில் மீன்கள் இறந்தது எப்படி?: ஆய்வு செய்ய பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணி 2வது நாளாக இன்றும் நடந்தது. மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும், 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, இந்த குளத்தில் பக்தர்கள் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. மேலும், 2 தீர்த்தங்களை சுற்றிலும் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்பு வேலிகள் … Read more

ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு சிறப்பு ரயில் இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரிக்கும், சேப்பாக்கத்தில் இருந்து கடற்கரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் கூடிய நாடாளுமன்றம் 14வது நாளாக இன்றும் முடங்கியது..!!

டெல்லி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஏப்.5 காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டக்கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கியது . கூட்டம் தொடங்கிய நாள் முதல் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த … Read more

அருப்புக்கோட்டையில் அம்மன் கோயில் திருவிழாவுக்கு தயாராகும் அழகிய பொம்மைகள்: நேர்த்திக்கடன் பக்தர்களுக்கு விநியோகிக்க ரெடி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அம்மன் கோயில் திருவிழாக்களையொட்டி, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு விற்பனை செய்ய அழகிய, அசத்தல் பொம்மைகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. வரும் 4ம் தேதி பொங்கல் விழாவும், 5ந் தேதி அக்னிச்சட்டி மற்றும் பூக்குழி, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடக்கிறது. மேலும், புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவும் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாக்களில் பக்தர்கள் குழந்தை வரம் கேட்டல், திருமண … Read more

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார்: பரூக் அப்துல்லா

காஷ்மீர்: பெரியாரும் கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பாதுகாக்கிறார் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தேசத்தின் நன்மைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னே நாம் ஒருங்கிணைய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.