கும்பகோணம் மகாகாளியம்மன் கோயிலில் திருநடன வீதிஉலா
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுந்தர மகாகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 132ம் ஆண்டு பிரம்மோற்சவம் விழா, கடந்த மார்ச் 25ம் தேதியன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பச்சை காளி, பவள காளி நடன வீதியுலா நேற்று நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயில் வளாகத்தில் … Read more