வேலூர் அருகே பொறியாளர் வீட்டில் 54 சவரன் நகைகள் கொள்ளை..!!

வேலூர்: வேலூர் சக்தி நகரில் பொறியாளர் பக்ருதீன் வீட்டில் 54 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பக்ருதீன் வீட்டின் பூட்டை உடைத்து 500 கிராம் வெள்ளி நகைகள், ரூ.50,000 ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டன. மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை: சூரத் நீதிமன்றம்

சூரத்: அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை என்று சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுதாரர் புர்னேஷ் மோடி ஏப்.10ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ராகுலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை; வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொர்ணவாரி பட்டத்தில் விவசாய பணிகள் மும்முரம்: கோ 51, மகேந்திரா ரக நெல் அதிகளவில் விதைப்பு

பெரணமல்லூர்:  திருவண்ணாமலை மாவட்டத்தில், சொர்ணவாரி பட்டத்தில் விவசாயம் செய்ய விளை நிலத்தினை சரி செய்தும், விதைகளை விதைத்தும் விவசாயிகள் ஆர்வமுடன் பணிகளில் ஈடுபட்டு  வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்களில் ஓரளவு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தவிர, விவசாயம் செய்வதற்கு கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, விவசாயிகள் தற்போது சொர்ணவாரி பட்டத்தில் விவசாயம் செய்ய ஆயுத்தமாகி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது: … Read more

மதுரையில் இளைஞர்கள் 'பைக்' சாகசம் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் அதிர்ச்சி..!!

மதுரை: மதுரையில் இளைஞர்கள் ‘பைக்’ சாகசம் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நெரிசல் மிக்க சாலையில் அதிவேகமாகவும், வளைந்தும் சென்று இளைஞர்கள் ‘பைக்’ சாகசத்தில் ஈடுபட்டனர். சாகசம் செய்த இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது மாநில அரசு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஓடும் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் நொய்டாவை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

காரைக்காலில் ஓன்றரை ஆண்டுக்குப்பின் கொரோனா தொற்றால் புதுச்சேரியை சேர்ந்த பெண் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் ஓன்றரை ஆண்டுக்குப்பின் கொரோனா தொற்றால் பெண் உயிரிழந்துள்ளார். காரைக்காலை சேர்ந்த 35 வயது பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இணை நோய்கள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் … Read more

அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்திக்கு ஏப்.13 வரை ஜாமின் நீட்டிப்பு..!!

சூரத்: அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்திக்கு ஏப்.13 வரை ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏப்.13-ல் விசாரணைக்கு வருகிறது.

மேற்குவங்க ராமநவமி வன்முறையில் பாஜக எம்எல்ஏ படுகாயம்: பதற்றத்தால் இணைய சேவை துண்டிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த ராமநவமி விழாவில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மீது குறிப்பிட்ட பிரிவினர் நடத்திய தாக்குதலில், அவர் படுகாயமடைந்தார். அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கடந்த சில நாட்களுக்கு முன் ராம நவமி ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. அதேபோல் ஹூக்ளியில் நடந்த ராம நவமி யாத்திரையில் பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், எம்எல்ஏ பிமன் … Read more

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஐஎஃப்எஸ் நிதி நிறுவன உதவியாளர் வீட்டில் சோதனை..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஐஎஃப்எஸ் நிதி நிறுவன உதவியாளர் ஜெகன்நாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜெகன்நாதன் என்பவர் வீட்டில் சென்னை அமலாக்க குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்துகின்றனர். பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக ஐஎஃப்எஸ் நிறுவனம் மீது புகார் உள்ள நிலையில் சோதனை நடக்கிறது.

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும் நிலையில் மகாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி பூங்கா செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.