சிபிஐயின் முக்கிய பொறுப்பு நாட்டை ஊழலற்றதாக மாற்ற வேண்டும்: சிபிஐயின் வைர விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: நீங்கள் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறீர்களோ அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன், அவர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இன்றும் அவர்கள் சில மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர், ஆனால் நீங்கள் (சிபிஐ) உங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும், எந்த ஊழல்வாதியும் தப்பிக்கக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் ஊழல் செய்ய போட்டி இருந்தது. அந்த நேரத்தில் பெரிய ஊழல்கள் நடந்தன, ஆனால் குற்றம் … Read more

நெகமம் பகுதி காட்டன்சேலைக்கு புவிசார் குறியீடு: கைத்தறி நெசவாளர்கள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நெகமம் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் காட்டன் சேலை தயாரிக்கும் பணி அதிகளவு உள்ளது. அதிலும், கைத்தறி மூலம் காட்டன் தயாப்புக்கு நல்ல வரவேற்பும்,  உள்ளது. அதிலும்கோடை காலத்தில் பெண்கள் விரும்பி அணியும் கைத்தறி நெசவு சேலைக்கு கூடுதல் வரவேற்பு உள்ளது. எட்டுகஜம் நூல்சேலை முதல், பெண்களுக்கான நாகரிகமான காட்டன் சேலைகளும் நெகமத்தில் உற்பத்தியாவதுடன், அவை சென்னை திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இத்தகைய புகழ்பெற்ற நெகமம் காட்டன் … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாத சதியா?: போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கோழிக்கோடு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் பயங்கரவாத சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகப்படும் நபர் எனக் கூறப்படும் ஒருவரின் பையில் இருந்து இந்தி, ஆங்கிலக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், ரயில்வே போலீசார் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர். கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பென்னாகரம் அருகே 2 யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு: யானைகள் எப்படி இறந்தன என வனத்துறை விசாரணை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 2 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 2 யானைகள் உயிரிழந்துள்ளது. பென்னாகரம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஆண், பெண் யானை உயிரிழந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடுப்பட்டி சின்னாறு வனப்பகுதியில் 10 வயது பெண் யானை சின்னாறு ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற போது ஆற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் வனத்துறையினர் யானை உயிரிழந்த காரணம் அறிய … Read more

ஏப்ரல் 5ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல்தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் எழுந்ததால் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 5ஆம் தேதி திறக்கப்படும்

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா என்ற பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழப்பு: பணம், துப்பாக்கிகள் பறிமுதல்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து 2 ஏகே 47 துப்பாக்கிகளும், 10 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. 5 பேரில் இருவரிடம் தலா ரூ.25லட்சமும், மற்ற இருவரிடம் தலா ரூ.5லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீஸ் கூறியுள்ளது. சத்ராவில் நடந்த என்கவுன்டரில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், இருவர் … Read more

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பான பொள்ளாச்சி மாவட்ட அறிவிப்பு நிறைவேறும்: அமைச்சர் பதிலால் மக்களின் நம்பிக்கை அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் இது திமுக ஆட்சியில் நிறைவேறும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விவசாயம் நிறைந்த பகுதிகளின் ஒன்றாக, கோவை மாட்டம் பொள்ளாச்சியும் விளங்குகிறது. 1857ம் ஆண்டு முதல் வருவாய் கோட்டமாக பொள்ளாச்சி இருந்தது. இந்த வருவாய் கோட்டத்தில் பல ஆண்டுகளாக பொள்ளாச்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம்,  வால்பாறை உள்ளிட்ட தாலுகா பகுதியும்  அடங்கியது. இதில், சுமார் 110க்கும் மேற்பட்ட கிராமங்கள் என அதிக கிராமங்கள் கொண்ட  தாலுகாவாக பொள்ளாச்சியே விளங்கியது. … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இரு அறைகள் சேதம்

விருதுநகர்: சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து காரணமாக அறை சேதமடைந்துள்ளது. ரசாயன பொருள் வைக்கப்பட்ட அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு அறைகள் முழுவதும் சேதமடைந்தது.

கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி..!!

திருவனந்தபுரம்: கோழிக்கோடு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் டைரியில் கன்னியாகுமரி என எழுதப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பையில் இருந்த டைரியில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்தனர்.