ராகுல்காந்தி தகுதிநீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது: காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி

சிவகங்கை: ராகுல்காந்தி தகுதிநீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2019-ல் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கவேண்டாம் என வாதியே மனுத்தாக்கல் செய்தும் குஜராத் நீதிமன்றம் விசாரித்துள்ளது என்று தெரிவித்தார்.

கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனிடம் காவல் நிலையத்தில் விசாரணை..!!

சென்னை: கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை சென்னை எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஹரி பத்மன் உள்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். வழக்கில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

கொல்கத்தா: ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹவுரா, ஹுக்ளி உள்ளிட்ட இடங்களில் பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு இணையதள சேவை துண்டிப்பு.

பர்லியாறு பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள்: பொருட்களை எடுத்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை வளம் மிக்க மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள், மான், புலி,சிறுத்தை, கரடி,காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் வலசைப் பாதை என்பதால் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகம். கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக வனப்பகுதியில் மழை இல்லாத காரணத்தினாலும்,தற்போது கோடை காலம் துவக்கம் என்பதாலும், வனப்பகுதிக்குள் போதுமான தண்ணீர் கிடைக்காததனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே … Read more

பாலியல் புகார் விவகாரத்தில் மகளிர் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன்: கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி தகவல்

சென்னை: பாலியல் புகார் விவகாரத்தில் மகளிர் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன் என்று கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார். மாணவிகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி நடத்திய விசாரணை நிறைவடைந்தது. கலாஷேத்ரா இயக்குநர் ரேவதியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். கலாஷேத்ரா இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களிடம் விசாரணை நிறைவுபெற்றது. கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 பேராசிரியர்கள் மீது புகார் … Read more

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடக்கம்

புதுச்சேரி: காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியுள்ளது. சோமஸ்கந்தர் தேரில் எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 

பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர்: பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி விருதுநகர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி 6ஆம் தேதி வரை 4 நாட்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு போலீசார் நோட்டீஸ்..!!

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆர்.கே.சுரேஷ் வீட்டிற்கு சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது வீட்டில் நோட்டீசை வழங்கினர். ஆருத்ரா இயக்குநர் ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷ்க்கும் மோசடியில் தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. ஹரீஷின் வாக்குமூலம் அடிப்படையில் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்லவுள்ள ராகுல்காந்தி உடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்லவுள்ள ராகுல்காந்தி உடன் சோனியா காந்தி சந்தித்துள்ளார். சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய ராகுல் காந்தி இன்று சூரத் செல்கிறார்.

அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் நிலநடுக்கம்

அலாஸ்கா: அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் எதும் வெளியாகவில்லை.