பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஹைதராபாத்தில் கைது.! தனிப்படை போலீசார் அதிரடி

ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.   மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், … Read more

பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2% ஆக குறைப்பு புதிய சந்தை வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்தது: தணிக்கையில் வேறுபாடு இருந்தால் களைய நடவடிக்கை; ஐஜி உத்தரவு

நெல்லை: பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கும் 2023-24 பட்ஜெட் அறிவிப்பு, ஏப்.1 முதல் அமலுக்கு வந்தது. இதற்கான சந்தை வழிகாட்டி மதிப்பை அமல்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கி பதிவுத்துறை ஐஜி சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2023-24ம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்துவது … Read more

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவ தேர் திருவிழா

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர், முருகன், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் உட்பட 5 தேர்களின் வீதியுலா நடைபெறுகிறது.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது

ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளை பற்றி விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமையாக மேற்கத்திய நாடுகள் நினைக்கிறது: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் கண்டனம்

பெங்களூரு,: மற்ற நாடுகள் குறித்து விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமை என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.  கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு பாஜ ஏற்பாடு செய்திருந்தது. கப்பன் பூங்காவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்முறை வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் உள்பட ஏராளமான இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more

டெல்லியில் இன்று திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம்

டெல்லி: டெல்லியில் திமுக தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா(2), ரஹ்மத், சௌபிக் ஆகிய 3 பேர் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவு

சேலம்: தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுக் திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான, 6 முதல் 18 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,832,235 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,832,235 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,056,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,009,980 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,915 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்டு பலாத்காரம் செய்து 17 பெண்கள் படுகொலை: குஜராத் கலவர வழக்கில் 26 பேர் விடுதலை

கோத்ரா: குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது கடந்த 2002ல் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.  இது தொடர்பாக பல வழக்குகளின் விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இவற்றில் கலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய விசாரணையும் நடந்து வந்தது. அங்கு 17 முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் … Read more