ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2'

கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'இந்தியன்'. தற்போது ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று கடந்த … Read more

ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித்தின் பிறந்தநாளான நேற்று அவரது படங்கள் குறித்த ஏதாவது ஒரு அப்டேட்டாவது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்திற்காவது ஒரு போஸ்டராவது வரும் என காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாந்து போனார்கள். இது குறித்து விசாரித்தபோது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ஜுன் மாதம்தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது. இப்போதே ஒரு போஸ்டரை விட்டால் … Read more

தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு

தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று மே 2ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். படத்தின் டீசர்தான் வெளிவரப் போகிறது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தில் நடிக்கும் நாகார்ஜுனாவின் கதாபாத்திர முதல் போஸ்டர் வெளியாகும் என பின்னர் அறிவித்தார்கள். அதை இன்று நடைபெற … Read more

நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர்

கடந்த ஆண்டில் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'விருபாக்ஷா'. வித்தியாசமான ஹாரர் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து கார்த்திக்கின் அடுத்த படத்தை விருபாக்ஷா படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனமும் சுகுமார் ரைட்டிங் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். இந்த நிலையில் இதில் கதாநாயகனாக நாக சைதன்யா நடிப்பதாகவும், கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் த்ரில்லர் … Read more

மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம்

நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வருஷங்களுக்கு சேஷம் படம், தொடர் தோல்விகளில் துவண்டிருந்த அவரை வெற்றி ஏணி மூலம் மேலே ஏறி வர உதவியிருக்கிறது. அந்த படத்தில் அவர் இடைவேளைக்கு பின் தான் வருகிறார் என்றாலும் படத்தின் நாயகர்களாக பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் சீனிவாசன் என இருவர் இருந்தாலும் கூட மொத்த படமும் இடைவேளைக்குப் பிறகு நிவின்பாலி கைவசம் சென்றுவிட்டது. அந்த வகையில் இந்த படத்தின் மூலம் கம் பேக் … Read more

மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ

கடந்த பிப்ரவரி மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக உருவாகி இருந்ததுடன் வித்தியாசமாக 80 வயது மனிதர் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருந்தார் மம்முட்டி. அதை தொடர்ந்து அதற்கு முற்றிலும் மாறாக தற்போது அவர் ஆக்சன் ஹீரோவாக நடித்துள்ள டர்போ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா மற்றும் அதன் இரண்டாம் பாகமாக மதுர ராஜா ஆகிய படங்களை இயக்கிய புலி முருகன் பட இயக்குனர் … Read more

100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் சேகர் கம்முலா டைரக்ஷனில் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 30 நாட்கள் தான் பங்கேற்றுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏழு நாட்கள் மட்டுமே பகலில் நடைபெற்றது என்றும் மீதி நாட்கள் எல்லாமே இரவு நேர படப்பிடிப்பு தான் என்றும கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. பொதுவாகவே ராஷ்மிகா குறித்து வெளியாகும் வீடியோக்கள் என்றால் ஒன்று அவர் ஏர்போர்ட்டில் … Read more

நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்?

பகவதி, சென்னை 28, சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது கருப்பர் நகரம், பேபி அண்ட் பேபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை பிரக்யா நக்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெய், புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பிரக்யா நக்ரா தனது கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்க, ஜெய் தனது … Read more

அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வரும் அஜித் குமார், மே ஒன்றாம் தேதியான இன்று தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு, அஜித்தின் பிறந்தநாள் ஹேஷ்டேக்கும் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் அஜித்தின் மனைவியான ஷாலினி அவருக்கு தனது 53வது பிறந்தநாள் பரிசாக விலை உயர்ந்த டுகாட்டி பைக் வழங்கியிருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளத்தில் … Read more

தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொந்தமாக புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்கு ரஜினிகாந்த், லதா ஆகியோர் சென்று பார்த்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யாவின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் அப்போது உடனிருந்துள்ளனர். நடிகர் தனுஷ் உடனான திருமண வாழ்வை முறித்த நிலையில் போயஸ் கார்டனில் உள்ள தனது அப்பா ரஜினிகாந்த் வீட்டில்தான் வசித்து வந்தாராம் ஐஸ்வர்யா. தனக்கென தனி வீடு ஒன்றை வாங்க வேண்டும் என்ற … Read more