சினிமா ஆரோக்கியமாக இருப்பதாக ஹரி உற்சாகம்

'ரத்னம்' படத்தின் புரமோசனுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹரி தூத்துக்குடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடையே பேசும்போது, “விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கில்லி' படத்திற்கு கூடியுள்ள கூட்டம் சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல சினிமாவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை காட்டுகிறது” என்றார். மேலும் அவர் பேசும்போது “ரத்னம் எனக்கு 17வது படம். … Read more

பெண் வேடத்தில் கவின் குத்தாட்டம்

இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ஸ்டார்'. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர், கவின் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கவினுடன் அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மெலோடி' என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில், கவின் … Read more

வெற்றிமாறன் கதையில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்

'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்'படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் படங்கள் குறித்து அறிவித்து வருகிறார். 'துர்கா' என்ற படத்தில் நடிப்பதை சமீபத்தில் அறிவித்தார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் எழுதிய 'பென்ஸ்' என்ற கதையில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். இப்போது வெற்றிமாறன் கதையில் நடிக்க இருக்கிறார். வெற்றிமாறனை சந்தித்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு ராகவா லாரன்ஸ் இதனை தெரிவித்திருக்கிறார். படத்தை பைப் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கும் பதிவில் “வணக்கம் நண்பர்களே … Read more

'ரத்னம்' படத்தைப் புறக்கணிக்கும் பிரியா பவானி சங்கர் ?

ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ரத்னம்'. இப்படம் இந்த வாரம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. எந்த ஒரு யு டியூப் சேனல்களில் கூட பிரியாவின் பேட்டிகளைக் காணவில்லை. படத்தின் இயக்குனர் ஹரி, விஷால் ஆகியோர் மட்டுமே பேசி வருகிறார்கள். … Read more

'கில்லி' சாதனையை முறியடிக்க வரும் 'மங்காத்தா'

ஒரு விஜய் படம் வந்தால் பின்னாடியே ஒரு அஜித் படமும் வந்தாகணுமே… ஆமாம், வருகிறது 'மங்காத்தா'. இரு தினங்களுக்கு முன்பாக விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த 'கில்லி' படம் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை புரிந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டும் ஒரு கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, அஜித் ரசிகர்களுக்குக் கோபம் வராதா ?. அவர்களும் ஒரு ரீ-ரிலீஸை வரவைக்க வேண்டும் என 'மங்காத்தா' பட ரீ-ரிலீஸுக்கு கோரிக்கை வைத்தார்கள். இப்போது அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் … Read more

பிளாஷ்பேக்: ஜானகியை அறிமுகப்படுத்தியருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை

தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இளையராஜாவின் இசையில் அதிகமான பாடல்களை பாடி உள்ளதால் ஜானகியை இளையராஜாதான் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜானகியை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர் தஞ்சை மாவட்டம் வேதாந்தபுரத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரங்கசாமி பார்த்தசாரதி என்ற ஆர்.பார்த்தசாரதி. டி.எஸ்.பாலையா தயாரிப்பில் 1957ம் ஆண்டு வெளியான 'மகதலநாட்டு மேரி' படத்தில் பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். எஸ்.ஜானகிக்கு முதல் டூயட் பாடலும் இதுதான். “கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை தன் … Read more

ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'கில்லி' படம் சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. முதல் நாளிலேயே சுமார் 8 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் இதுவரை ரீ-ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூலித்துள்ளது 'கில்லி' படம் தானாம். இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். 'கில்லி' படத்திற்கு முன்பாக “எதிரும் புதிரும், தில், தூள்” ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் விக்ரம் நடித்த 'தில், தூள்' … Read more

ஏப்ரல் 26ல் 4 படங்கள் ரிலீஸ்

2024ம் ஆண்டு ஆரம்பமானதும் தெரியவில்லை, நான்காவது மாதம் கடந்து போவதும் தெரியவில்லை. விர்ர்ர்ரென போய்க் கொண்டே இருக்கிறது. வாராவாரம் நான்கைந்து படங்களாவது வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 26ம் தேதியன்றும் நான்கு படங்கள் வெளிவர உள்ளது. ஹரி இயக்கத்தில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் 'ரத்னம்', மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் 'ஒரு நொடி', எஸ்.சசிகுமார் இயக்கத்தில் … Read more

'கோட்' படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டராக இடம்பெறுகிறது! -வெங்கட் பிரபு தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அங்கு வில்லன்களுடன் விஜய் மோதும் பைக் சேஸிங் உள்ளிட்ட பல ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ‛‛இந்த கோட் படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது. குறிப்பாக பல இந்திய படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்த … Read more

'கில்லி' ரீரிலீஸ் – முதல் நாள் வசூல் 8 கோடி?

2004ம் ஆண்டு விஜய், திரிஷா நடித்த 'கில்லி' படம் முதல் முறை வந்த போது கூட முதல் நாளில் இவ்வளவு வசூலை அள்ளியிருக்க முடியாது. பண மதிப்பில் வித்தியாசம் இருக்கலாம். ஆனாலும், நேற்றைய ரீ-ரிலீசில் 'கில்லி' படம் சுமார் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரீரிலீஸ் படங்களில் இதுவரை வெளிவந்த முந்தைய படங்களின் சாதனையையும் 'கில்லி' முறியடித்துள்ளதாம். அது மட்டுமல்ல நேற்று படம் பார்த்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு சாதனையில் சேர்ந்துள்ளது. இந்த … Read more