சமந்தா கட்டியிருந்த வாட்ச் மதிப்பு ரூ.70 லட்சம்

சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் என்றால் அவர்களது ஆடைகளைப் பற்றியும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பற்றியும்தான் பேசுவார்கள். ஆனால், நடிகை சமந்தா அவர் கட்டியிருந்த வாட்ச் பற்றிப் பேச வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார் சமந்தா. அதில் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு 70 லட்சம் ரூபாயாம். செர்பென்ட்டி ஸ்பிகா வாட்ச் என்ற அந்த கைக்கடிகாரத்தில் டயமண்ட் பதிக்கப்பட்டிருக்கிறதாம். பிரேஸ்லெட் போன்ற தோற்றத்தில் இருக்கும் வாட்ச் அது. சில அரசியல் பிரபலங்கள் … Read more

மும்பை செல்லும் குபேரா படக்குழு!

தனுஷின் 51வது படமான 'குபேரா' படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக ஹைதராபாத், திருப்பதி, மும்பை, பேங்காக் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதன் அடுத்தக்கட்ட … Read more

சூர்யா 44வது படத்தில் இணைந்த பிரபலங்கள்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். தற்போது இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ‛24, பேட்ட' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த திரு என்பவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், முதல் முறையாக இப்படத்தின் மூலம் சூர்யாவிற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார் என உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் 17ம் … Read more

உயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பகீர் வீடியோ

பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ஒரு சிறுவன் ஸ்மோக் பிஸ்கட் ஒன்றை வாங்கி சாப்பிடுகிறான். ஆனால் அதை வாயில் போட்டதுமே அவன் வலியால் துடிக்கிறான். இதுகுறித்து இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‛இதுபோன்று விற்கும் ஸ்மோக் பிஸ்கட் என்ற தின்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகள் புகையை பார்த்து … Read more

பிரபல மலையாள இயக்குனர் வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான நகை கொள்ளை

மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஜோஷி. மம்முட்டி, மோகன்லால், திலீப் என முன்னணி நடிகர்களை வைத்தே கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் இயக்கியவர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில் … Read more

சந்தீப் கிஷன் வைத்து படம் இயக்கும் சாம் ஆண்டன்!

நடிகர் சந்தீப் கிஷன் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அங்கு அவருக்கென்று தனி இடம் உள்ளது. தமிழில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பழக்கமான நடிகராக உள்ளார். தற்போது தனுஷின் 'ராயன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சந்தீப் கிஷன். இந்நிலையில் புதிதாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கின்றார். கோரிலா, 100, டார்லிங் உள்ளிட்ட படங்களைக் இயக்கிய சாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். இதனை பேஷன் … Read more

இறுதிகட்டத்தை எட்டிய ‛மண்ணாங்கட்டி' படம்!

நடிகை நயன்தாரா திருமணம், குழந்தைகளுக்கு பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிளாக்ஷீப் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான ‛டூட்' விக்கி இயக்கும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு என இருவரும் கோலமாவு கோகிலா படத்திற்கு இணைந்து நடிக்கின்றனர். சான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்..ஏற்கனவே இதன் படப்பிடிப்பை கடந்த சில மாதங்களாக சென்னையில் அரங்கம் அமைத்து நடத்தி … Read more

ப்ரீத்தாவின் பிரியமான கனவு

பி.எஸ்சி., படித்த 24 வயதான இளம் நாயகி ப்ரீத்தாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து இவரது ஸ்டோரிஸ், போஸ்ட், ரீல்ஸ் எப்போது வரும் என காத்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்… இளசுகளிடம் இவரது மவுசை! ப்ரீத்தா கூறியதாவது: சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அப்பா, அம்மாவிற்கு நான் ஒரே பொண்ணு. பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எட்டாக்கனியாக இருந்தது. என் குரலை என்னுடன் இருப்பவர்கள் கேலி செய்வார்கள்; எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பேன். ஒரு கட்டத்தில் … Read more

கபீர் சிங் படத்தில் நடித்தது நான் செய்த இமாலய தவறு ; பாலிவுட் நடிகர் விரக்தி

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன ‛அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே படத்தை ஹிந்தியில் ஷாஹித் கபூர் நடிப்பில் ‛கபீர் சிங்' என்கிற பெயரில் ரீமேக் செய்தார். அங்கேயும் இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் என்கிற படத்தையும் இயக்கி கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் என்கிற சாதனை படத்திற்கு சொந்தக்காரராகவும் … Read more

மீண்டும் ஜோடியாகும் சிம்பு, திரிஷா!

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்போது தேர்தல் களத்தில் கமல் பிஸியாக இருப்பதால் தக் லைப் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. இந்த படத்தில் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், திரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் … Read more