நிவின்பாலி பட புரமோஷனுக்காக வெளியான 'உலக மலையாளி ஆந்தம்'

மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் நிவின்பாலி. அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் அதிக அளவிலான ரசிகர்களை பெற்றார். ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ‛வருஷங்களுக்கு சேஷம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். இந்த வெற்றியுடன் சூட்டோடு சூடாக … Read more

கதாநாயகிகளே இல்லாமல் படம் இயக்குவது ஏன் ? பஹத் பாசில் பட இயக்குனர் விளக்கம்

தமிழ் படங்களில் ஒரு கதாநாயகி இருந்தாலும் கூட கவர்ச்சிக்காகவும் வியாபாரத்திற்காகவும் இன்னொரு கதாநாயகியை வலிந்து திணித்துவரும் சூழலில், மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் தான் இயக்கிய இரண்டு படங்களிலுமே கதாநாயகிகளே இல்லாமல் படத்தை உருவாக்கி இரண்டு படங்களையும் சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். கடந்த வருடம் ஹாரர் காமெடி படமாக வெளியான ரோமாஞ்சம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அந்த படத்தில் முழுவதுமே இளைஞர்களை மையப்படுத்தி மட்டுமே ஹாரர் கலந்த காமெடி படமாக … Read more

பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண்

நியூ நார்மல் பிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் இளஞ்செழியன் தயாரிப்பில் நக்ஷா சரண் நடிக்கும் படம் 'பைக் டாக்சி'. கவுண்டமணி நடித்த 'எனக்கு வேறு வேறு எங்கும் கிளைகள் இல்லை' மற்றும் பின்னணிப் பாடகி ராஜலட்சுமி கதையின் நாயகியாக நடித்த 'லைசென்ஸ்' படங்களை இயக்கிய கணபதி பாலமுருகன் எழுதி இயக்குகிறார். ஏ.ஆர்.ரெஹானா இசையமைக்கிறார். ராமராஜன் நடித்து வரும் 'சாமானியன்' மற்றும் சுசீந்திரன் தயாரித்த 'மார்கழி திங்கள்' படங்களில் நடித்த நக்ஷா சரண் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக … Read more

எழுத்தாளராக நடிக்கும் வெற்றி

'எட்டு தோட்டாக்கள்' படத்தில் அறிமுகமாகி, அதன்பிறகு ஜீவி, கேர் ஆப் காதல், வனம், மெம்ரீஸ், பம்பர், ரெட் சாண்டல் படங்களில் நடித்தவர் வெற்றி. தற்போது அவர் நடித்து வரும் படம் 'ஆலன்'. இதில் அவருடன் நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹரிஷ் பெராடி, மதன்குமார், விவேக் பிரசன்னா, கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.சிவா என்ற புதுமுகம் இயக்குகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. படம் பற்றி இயக்குனர் கூறும்போது … Read more

ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி

சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த தமன் குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'ஒரு நொடி'. எம்.எஸ். பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்திருக்கிறார். தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் வருகிற 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்குமார் பேசியதாவது : என்னுடைய வாழ்க்கையில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களை நான் … Read more

பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர்

தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இயக்குனர் கே.சுப்பிரமணியம். பாலசந்தருக்கு முன்னர் அதிக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவர் அறிமுகப்படுத்தியவர்கள் பிற்காலத்தில் பெரிய நட்சத்திரங்களாக வலம் வந்தார்கள். அவரது 120வது பிறந்த நாள் இன்று. அவரை பற்றிய ஒரு சுவையான தகவல் இதோ… அசோஸியேட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கே.பி.வெங்கடராம அய்யர் என்பவர் நடத்தி வந்தபோது, அவரிடம் உதவியாளராக சேர்ந்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி சுப்பிரமணியம். வழக்கறிஞரான அவர் சினிமா மீதிருந்த ஈடுபாட்டால் வக்கீல் தொழிலைவிட்டு சினிமாவுக்கு … Read more

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'ரத்னம்'. ஹரி இயக்கி உள்ள இந்த படத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 26ம் தேதி வெளிவருகிறது. படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடந்தது. இதில் விஷால் பேசியதாவது : இதற்கு முன்பு வெளிவந்த 'மார்க் ஆண்டனி' … Read more

எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ்

எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் ஹரிப்பிரியா இசை நேயர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரையில் வீஜேவாக தனது கேரியரை தொடங்கிய ஹரிப்பிரியா தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சக நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின் விவகாரத்தும் பெற்று தற்போது தனியாக வசித்து வருகிறார். எதிர்நீச்சல் தொடருக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள ஹரிப்பிரியா சமீப காலங்களில் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். சில தினங்களுக்கு துபாய் டூர் சென்ற அவர், தற்போது பாலி தீவிற்கு … Read more

அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம்

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள தொடர் அன்பே வா. இதில் ஹீரோவாக நடித்து வருகிறார் விராட். இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான நவீனா என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது மகாபலிபுரம் பீச் ரெசார்ட்டில் வைத்து கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்தில் சக சின்னத்திரை நடிகர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் … Read more

சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ்

சந்தானம் நடித்து திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இங்க நான் தான் கிங்கு என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனந்த நாராயணன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். அவர்களுடன் தம்பி ராமையா, மனோபாலா, முனீஸ் காந்த், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த மாதம் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். ரொமான்ஸ் கலந்த … Read more