ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா

தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீ லீலா அந்த படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்தப்பெட்டி பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக … Read more

ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்?

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக வேட்டையன் படத்திற்காக ஓப்பனிங் பாடல் … Read more

‛ஆனந்த ராகம்…' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த உமா ரமணன் கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இல்லத்திலேயே இரவு 9:30 மணியளவில் இன்று(மே 1) காலமானார். நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான உமா, தொடர்ந்து இளையராஜா இசையில் பல … Read more

இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் 'கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சவுந்தர்யா, தற்போது அமேசான் ஓடிடி தளத்திற்காக வெப்தொடர் ஒன்றைத் தயாரித்து வருகிறார். நோவா இயக்கத்தில் 'கேங்ஸ் – குருதிப்புனல்' எனத் தலைப்பிடப்பட்ட அந்தத் தொடரில் அசோக் செல்வன், நாசர், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். … Read more

மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால்

நடிகர் விஷால் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'ரத்னம்'. வழக்கமான டெம்பிளேட்டில் வெளியானதால் இந்த திரைப்படத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து 'துப்பறிவாளன் 2'ம் பாகத்தினை விஷால் இயக்கி, நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்குகிறது. துப்பறிவாளன் 2ம் பாகத்தின் படப்பிடிப்பை நிறைவு பெற்ற பிறகு முத்தையா இயக்கத்தில் விஷால் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் இந்தப்படம் தயாராகிறது. ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் மருது படத்தில் விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்?

நடிகர் ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வேட்டையன், கூலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நடியாவலா ரஜினிகாந்தை சந்தித்து பேசிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை அவர் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது இப்படத்தை சாஜித் தயாரிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா … Read more

தக் லைப் படத்தின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினி உடன் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு டில்லியில் நடைபெற்று வருகிறது. தக் லைப் படத்திற்கு ஏற்கனவே ஒரு அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. இதில் கமல் பற்றிய அறிமுக காட்சிகள் இருந்தன. இப்போது மற்றொரு புதிய வீடியோவை … Read more

ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அனிருத் இசையமைக்கிறார். இந்த டீசரில் எம்.விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற ‛நினைத்தாலே இனிக்கும்' பட பாடல் வரிகள் ரஜினி பேசும் வசனங்களாக இடம் பெற்று இருந்தது. அதோடு அந்த டீசரில் ரஜினியின் ‛தங்க மகன்' படத்தில் இடம் பெறும் ‛வா வா பக்கம் வா…' பாடலின் … Read more

'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் அவரது இரண்டாவது காதலரான சாந்தனு ஹசரிகாவுடன் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு திடீரெனப் பிரிந்துவிட்டார். எப்போது திருமணம் செய்வது என்பது குறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியானது. மும்பையில் ஒரு அபார்ட்டிமென்ட்டில் வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரது தங்கை அக்ஷரா ஹாசனும் மும்பையில்தான் இருக்கிறார். நேற்று தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் ஒளியை உணர்கிறேன். இந்தத் தருணங்களுக்காக … Read more

கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின்

“நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்” ஆகிய படங்களில் நடித்தவர் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரின் பிர்சதா. அவர் தன்னுடைய கரு முட்டையை பாதுகாத்து வைத்துள்ளது பற்றி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். திருமணம் தள்ளிப் போக வாய்ப்புள்ளவர்களோ, அல்லது குழந்தை பெறுவதை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளவர்களோ இப்படி தங்களது கரு முட்டையை சேமித்து வைக்க முடியும். “கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்து யோசித்து வந்ததாகவும், கடைசியாக … Read more