'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்…

கிரிஷ் இயக்கத்தில் நஸ்லன், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பிரேமலு'. இப்படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. ஒரு சுவாரசியமான காதல் கதையாக வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. முதல் பாகம் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு நாளில் வெளியானது. ஆனால், இரண்டாம் பாகத்தை ஒரே … Read more

'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் ஜூனியர் என்டிஆர் மிகப் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்கிற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். ஹிரித்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் இந்திய சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் … Read more

ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கடந்த 2014 ஆம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று வெரிய பில்டெக் லிமிடெட் என்ற நிறுவனம் விளம்பரம் செய்தது. அதன் மூலமாக 6,600 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வசூலித்தார்கள். ஆனால் தாங்கள் சொன்னது போன்று பொதுமக்களுக்கு மாதம் தோறும் பத்து சதவீதம் வட்டி வழங்காமல் மக்களின் முதலீடையும் அந்த நிறுவனம் மோசடி செய்தது. இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா செட்டியும் அவரது கணவரான ராஜ் குந்த்ராவும் இருப்பது … Read more

வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம்

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில், வித்தியாசமான நடிப்பை வழங்கி வருபவர் நடிகர் பஹத் பாசில். குறிப்பாக கதாநாயகன், வில்லன் என எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதில் எவ்வளவு சீரியஸ் ஆக நடிக்கிறாரோ அதே அளவிற்கு நகைச்சுவை கலந்தும் நடித்து ரசிகர்களை வசியப்படுத்துவதில் வல்லவர். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரங்கா என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பஹத் பாசில். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து … Read more

மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேஜிஎப் படத்தின் மூலம் எப்படி யஷ் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக மாறினாரோ அதற்கு அடுத்ததாக ரிஷப் ஷெட்டிக்கும் அந்த அளவிற்கு ரசிகர் வட்டம் சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை … Read more

அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ?

தமிழகத்தில் நேற்று நடந்த லோக்சபா தேர்தலில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரவர் ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளித்தார்கள். ஆனால், சில சினிமா பிரபலங்கள் ஓட்டளிக்கச் செல்லவில்லை. சில படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படாமல் நடந்ததும் தெரிய வந்துள்ளது. மணிரத்னம், சிலம்பரசன் 'தக்லைப்' படப்பிடிப்பில் இருப்பதால் அவர்கள் ஓட்டு அளிக்கவில்லை என்கிறார்கள். அது போல 'தி கோட்' படக்குழுவினர் ரஷ்யாவிலிருந்து திரும்பாத காரணத்தால் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் யாருமே ஓட்டளிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. விஜய்க்கு மட்டும் நேற்று … Read more

இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம்

பெங்களூரு: ''நடிகரும், கணவருமான புவனை ஒரு கும்பல் தாக்கியது தொடர்பாக, நாம் பாகிஸ்தானில் இருக்கிறோமா,'' என்று, நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் அடைந்து உள்ளார். கன்னட திரை உலகில் இளம் நடிகர் புவன், 34. இவரது மனைவி ஹர்ஷிகா பூனாச்சா, 33. இவரும் நடிகை ஆவார். நேற்று முன்தினம் இரவு, ஹர்ஷிகா பூனாச்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டார். 'பெங்களூரு புலிகேசிநகரில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். மோசமான அனுபவத்தை சந்தித்தோம்' என்று கூறி இருந்தார். … Read more

ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்…!

இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. … Read more

மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர். மோகன்லாலுடன் இதற்கு முன்பு 55 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஷோபனா. அடுத்து 56வது படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள். தருண் மூர்த்தி இயக்கத்தில் உருவாக உள்ள 'எல் 360' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள். இப்படத்தில் நடிக்கப் போவது குறித்து நடிகை ஷோபனா வெளியிட்டுள்ள வீடியோவில், “சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்க இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. … Read more

விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் 2026ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். காதல் நாயகனாக அறிமுகமானாலும் கடந்த பல படங்களாகவே ஆக்ஷன் நாயகன் என்ற அந்தஸ்துடன்தான் இருக்கிறார் விஜய். அவரைப் போலவே காதல் நாயகனாக அறிமுகமாகி, ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர் விஷால். விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது போல விஷாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போகதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே, நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் … Read more