ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ' ராபின் ஹூட்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ம் தேதி கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் … Read more

மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி

ஆனந்தம், ரன், பையா, சண்டைக்கோழி என ரசிகர்கள் விரும்பும் வகையிலான படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் பட தயாரிப்பிலும் இறங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரே நேரத்தில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததன் மூலமாகவும் அஞ்சான் படத்தை இயக்கியதன் மூலமாகவும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து வாரியர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு … Read more

சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில்

நடிகர் பஹத் பாசில் கடந்த இரண்டு வருடங்களாக விக்ரம், புஷ்பா, மாமன்னன், மலையாளத்தில் பாச்சாவும் அற்புத விளக்கும் என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த ஆவேசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஐந்தே நாட்களில் 50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த வருடம் அவர் கன்னட இயக்குனரான பவண்குமார் என்பவர் இயக்கத்தில் தூமம் என்கிற படத்தில் நடித்தார் பஹத் பாசில். அவருக்கு ஜோடியாக … Read more

பிரித்விராஜ் – ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல்

மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் பிளஸ்சி இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இது படமாக்கப்பட்டுள்ளது கேரளாவில் இருந்து அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்கச் சென்ற நஜீப் என்கிற இளைஞரின் நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையப்படுத்தி இந்த கதை எழுதப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகும் சமயத்தில் இதன் நிஜ கதாநாயகனான நஜீப் படம் குறித்தும் … Read more

தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ?

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு காலத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால், தற்போது தொடர் தோல்வியில் தவித்து வருகிறார். அக்ஷய் குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'படே மியான் சோட்டோ மியான்' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. சுமார் 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் 7 நாட்களுக்குப் பிறகு 100 கோடியை நெருங்குவதாகச் சொல்கிறார்கள். இன்னும் … Read more

ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள்

பான் இந்தியா அளவில் வெளியீடு என்றால் அதில் தென்னிந்திய அளவில் தெலுங்குப் படங்கள்தான் முன்னணியில் இருக்கிறது. இந்த வருடம் தமிழிலும் சில பிரம்மாண்டப் படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவற்றை வட இந்தியாவில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு அப்படங்களின் தயாரிப்பாளர்கள் உண்மையாகவே முயற்சிப்பதில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கும் அதே நிலைமைதான். ஆனால், தெலுங்கில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா' ஆகிய படங்களுக்குப் பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தி உரிமை விலையில் அதிக வியாபாரத்தைப் … Read more

ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம்

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தேர்தல் நாள் என்பதால் ரஷ்யாவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்துள்ளார் விஜய். சென்னை வந்தவுடனே முதல் வேலையாக நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் பள்ளியில் அவர் ஓட்டளித்தார். விஜய் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது ரசிகர்கள் கூட்டம் படையெடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி விஜய்யை ஓட்டளிக்க அழைத்து சென்றார்கள். அப்போது விஜய்யின் … Read more

ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல்

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வந்த ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ஸ்டார் படம் வருகிற மே மாதம் பத்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஒரு பதிவு போட்டுள்ளார் கவின். அதோடு காலண்டர், டைரி, போன் இல்ல மனசுல எதுல முடியுமோ அதுல குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மே 10 முதல் ஸ்டார் ரிலீஸ் என்று அப்படத்தில் தான் இடம் பெற்ற … Read more

பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர்

சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் நடித்த டான் என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் சிபி சக்ரவர்த்தி. அப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது. அதன் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோருக்கு புதிய … Read more

ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி

'விடுதலை' படத்தின் கதையின் நாயகனான சூரி, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சூரியும், அவரது மனைவியும் ஓட்டளிப்பதற்காக மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வாக்காளர் பட்டியலில் சூரியின் பெயர் இடம் பெறாமல் விடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் காரணமாக சூரி ஓட்டளிக்க முடியவில்லை. அவரது மனைவி மட்டுமே ஓட்டளித்தார். அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சூரி, “என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த எல்லா தேர்தல்லயும் என்னுடைய உரிமையை கரெக்டா செஞ்சிருக்கேன். ஆனா, … Read more