'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு

சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'அரண்மனை 4'. இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வெளியீட்டை மே 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள். சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன … Read more

600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ்

தரணி இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் 'கில்லி'. இப்படம் உலகம் முழுவதும் வெளிநாடுகளில் இன்றும், இந்தியாவில் நாளையும் ரீ-ரிலீஸ் முறையில் வெளியாகிறது. வெளிநாடுகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாவது புதிய சாதனை. புதிய படங்கள்தான் அவ்வளவு தியேட்டர்களில் வெளியாகும். ஆனால், ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்கு அவ்வளவு தியேட்டர்கள் என்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல இந்தியாவிலும் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறதாம். தமிழகம், கர்நாடகா, … Read more

'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்து வந்து பின்னர் தனுஷ் தமிழ் தெலுங்கில் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் வெளிச்சம் பெற்றவர் நடிகை சம்யுக்தா மேனன். தனது பெயரில் உள்ள மேனன் என்கிற சாதி அடையாளத்தை குறிக்கும் வார்த்தையை நீக்கிவிட்டு சம்யுக்தா என்றே தன்னை அழைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். ராமநவமி நாளன்று ஆதிசக்தி என்கிற ஒரு புது அமைப்பை உருவாக்கியுள்ளார் சமயுக்தா. இது குறித்து தனது சோசியல் மீடியா … Read more

இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தின் முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான அந்தப் பாடல் யு-டியூப் தளத்தில் 38 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. விஜய்யின் பாடல்களுக்குக் கிடைக்கும் வழக்கமான வரவேற்புதான் இந்தப் பாடலுக்கும் கிடைத்துள்ளது. இருந்தாலும் ஒரு தரப்பு ரசிகர்கள், குறிப்பாக அனிருத் ரசிகர்கள் இந்தப் பாடல் குறித்து தரக் குறைவான விதத்தில் யுவனின் இன்ஸ்டா தளத்தில் கமெண்ட்டுகளைச் செய்துள்ளனர். கடந்த நான்கு … Read more

இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்…!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. உலக அரங்கில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான தேர்தல், 6 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 19) முதல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேக்கட்டமாக இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற காலை முதலே ஆர்வம் காட்டி உள்ளனர். திரைப்பிரபலங்களும் காலை முதலே ஓட்டளித்து வருகின்றனர். * நடிகர் ரஜினிகாந்த் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி … Read more

இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டா தளத்தில் பயணித்து வருகிறார். இவரின் கணக்கு திடீரென நீக்கப்பட்டது. சமீபத்தில் இவர் இசையமைப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‛கோட்' படத்தில் இருந்து ‛விசில் போடு' என்ற பாடல் வெளியானது. 38 மில்லியன் பார்வைகளை இந்தப்பாடல் கடந்தாலும் ரசிகர்களை கவரவில்லை என அனிருத் ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் சண்டையிட்டு வந்தனர். இதனால் தான் யுவன் இன்ஸ்டாதளம் நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. திடீரென யுவன் இன்ஸ்டா கணக்கு இல்லாதது அவரது ரசிகர்களுக்கு … Read more

ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், ஓட்டளிக்கும் உரிமை என்பது அனைத்து குடிமகனுக்கும் முக்கியமான கடமையாகும். அதனால் 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். குறிப்பாக, முதல் முறையாக ஓட்டளிக்க இருப்பவர்கள் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இளைஞர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை பெற்று உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் … Read more

விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இறுதி பிரச்சாரம் நேற்று நடந்தது. வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை எடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி … Read more

தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் 70 சதவீத படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் சில பிரச்னைகளால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆகி வந்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த பின் … Read more

'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா

கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரியில் வெளிவந்த மலையாளப் படம் 'பிரேமலு'. இப்படம் தெலுங்கு, தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இப்படத்தை நயன்தாரா இப்போதுதான் பார்த்திருக்கிறார். படத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்து, “சிறந்த படங்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது,” எனப் பாராட்டியுள்ளார். தியேட்டர்கள் மூலம் மட்டுமே 130 கோடி வரை வசூலித்துள்ள இப்படத்திற்கு தற்போது ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. … Read more