ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா'

கடந்த 2011ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' மங்காத்தா'. அஜித்தின் 50வது படமாக வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் பழைய படங்களைக் ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் 'கில்லி' படம் வருகின்ற ஏப்ரல் 20ம் அன்று வெளியாகிறது. இந்த நிலையில் மங்காத்தா படத்தை மே 1ம் … Read more

மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான ‛மிஸ்டர் மனைவி' தொடரில் ஹீரோயினாக கலக்கி வந்தார் ஷபானா. மக்கள் மத்தியில் ஷபானா நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்து வரும் நிலையில், திடீரென அவர் சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் புது அஞ்சலியாக யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வானத்தைப் போல சீரியலில் நடித்த தேப்ஜானி மோடக் தான் அஞ்சலியாக நடிக்கிறார். ஷபானாவுக்கு பதிலாக என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் … Read more

அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் திரவியம். தொடர்ந்து ஈரமான ரோஜவே சீசன்-2விலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு சீரியலில் அறிமுகாகி நடித்து வரும் திரவியம், தற்போது மீண்டும் தமிழுக்கே வந்துள்ளார். விஜய் டிவியில் புதிதாக தயாராகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் திரவியம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸும், வில்லியாக ஆர்த்தி சுபாஷும் நடிக்கின்றனர். இந்த … Read more

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து

'இசை மும்மூர்த்திகளை எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை' என ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். 4,500 படல்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார் இளையராஜா. அவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக, காப்புரிமை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இளையராஜா … Read more

‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல்

'தரமணி' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ராக்கி, அஸ்வின்ஸ், பொன் ஒன்று கண்டேன் படங்களில் நடித்தவர் வசந்த் ரவி. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்தார். தற்போது வெப்பன், இந்திரா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். வசந்த் ரவி தனது பிறந்த நாளை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மீடியாக்கள் சுட்டிக் காட்டிய நிறை, குறைகளால்தான் நான் வளர்ந்து வருகிறேன். நிறைய பேர் என்னிடம் 'எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் … Read more

வீர தீர சூரன் – 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62'

கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர்தயாள் இயக்கத்தில், விஷ்ணு விஷால், கேத்தரின் தெரஸா, சூரி மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு ஆரம்பமான படம் 'வீர தீர சூரன்'. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்படம் டிராப் ஆகியது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான போதே தலைப்பு அதிரடியாக உள்ளது என்று பேசப்பட்டது. இப்போது விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள விக்ரமின் 62வது படத்திற்கு 'வீர தீர சூரன்' … Read more

லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்

லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் 'உத்தம வில்லன்'. கமல் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் லிங்குசாமி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக சில சமூக வலைத்தளங்களில் 'உத்தம வில்லன்' படம் பெரிய லாபம் தந்த படம் போன்ற கருத்து வெளியிடப்பட்டது. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் இந்த பட நஷ்டத்திற்கு கமல் ஒரு படம் பண்ணித் … Read more

இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன்

இப்போதெல்லாம் வாய்ப்பு குறையும் நடிகைகள், வாய்ப்பு தேடும் நடிகைகள் தங்களை ரசிகர்களுக்கு நினைவூட்டுவதற்காக இசை ஆல்பங்களில் ஆடுவது புதிய டிரண்டிங். அந்த வரிசையில் தற்போது 'எண்ட ஓமனே' என்ற இசை ஆல்பத்தில் ஆடியிருக்கிறார் அஞ்சு குரியன். மலையாள படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த அஞ்சு குரியன் 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். … Read more

'புஷ்பா 2' – ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா?

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வட இந்திய, ஹிந்தி தியேட்டர் உரிமை சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. பிரபல வினியோகஸ்தரான அனில் தடானி 'அட்வான்ஸ் முறை'யில் அந்த உரிமையை வாங்கியுள்ளாராம். 'ஜவான்' படத்தின் … Read more

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். மே மாதம் படம் வெளியாக வாய்ப்புள்ளது. இதையடுத்து சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வென்ஜாரா, துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விக்ரம் 62வது படத்திற்கு ' … Read more