தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2001ம் ஆண்டில் வெளிவந்த முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிப்பில் வெளியான அந்தப் படம் இன்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் விஜய் நடித்து ரீ-ரிலீஸ் ஆன 'கில்லி' படம் பத்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்திற்கான தியேட்டர் கொண்டாட்டங்கள் பலவும் வீடியோக்களாக வெளிவந்தன. அவற்றை மிஞ்சும் விதத்தில் இன்று சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் ஒரு சம்பவம் நடைபெற்றது. … Read more