பி.எம்., சாலை அவல நிலை மாறவில்லை| Dinamalar

தங்கவயல் : தங்கவயல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் முதல், ராபர்ட்சன் பேட்டை காந்தி சதுக்கம் வரையிலான, 3 கி.மீ., டபுள் ரோடு மற்றும் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணிகள் அரைகுறையாக நடந்து, 18 ஆண்டுகள் ஆகி விட்டன. இதை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.பத்து கோடி ரூபாய் செலவில் உருவான இந்த சாலை, பல்வேறு போராட்டங்கள், நெருக்கடிகளை சந்தித்தது. இச்சாலை எங்களின் சாதனையென, இரண்டு தேசியக் கட்சிகளும் தலையில் துாக்கி கொண்டாடின.இந்த சாலைக்காக, சாமிநாதபுரம், அசோகா … Read more

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க ஓகே என்கிறார் துருவ் விக்ரம்?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வீடியோ நேர்காணல் பேசிய துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார். விஜய்யும், விக்ரமும் திரைக்குப் பின்னால் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருவதால் துருவ் விக்ரமும், சஞ்சய்யும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். … Read more

ஆப்கனில் 2 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் விடுதலை| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர். இந்நிலையில், ஐ.நா., ஆணையத்தின்கீழ் பணியாற்றி வரும் இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களை, தலிபான் அமைப்பினர் கைது செய்து, காபூலில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர்களுடன், ஆப்கன் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.இதுகுறித்த தகவல் வெளிவந்ததும், பலரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். … Read more

பட்டா திருத்த சிறப்பு முகாம்| Dinamalar

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் வருவாய் துறை சார்பில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடந்தது.தாசில்தார் கோவர்த்தனன் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, ஊராட்சி தலைவர்கள் அவலுார்பேட்டை செல்வம், கடப்பனந்தல் பாக்கியலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் ஷாகின்அர்ஷத் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தஸ்தகீர், வி.ஏ.ஓ., பாலசுப்ரமணி வரவேற்றனர்.முகாமில், அவலுார்பேட்டை மற்றும் கடப்பனந்தல் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றம், பெயர் மாற்றம், உட்பிரிவுகளில் திருத்தம் மற்றும் இதர தேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. அவலுார்பேட்டை … Read more

நம்ப முடியாத உண்மை கதை : ரேவதிக்கு கஜோல் பாராட்டு

நடிகை ரேவதி படம் இயக்குவதிலும் சாதனை படைத்தவர். 2002ம் ஆண்டு அவர் இயக்கிய மித்ரு மை பிரண்ட் படம் தேசிய விருது பெற்றது. அதன்பிறகு பிஹிர் மிலேன்ஜ், கேரளா கபே, மும்பை கட்டிங் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கும் படம் சலாம் வெங்கி. இப்படத்தில் கஜோல் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று மும்பையில் தொடங்கியது. இதுகுறித்து கஜோல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: சொல்லப்பட வேண்டிய ஒரு கதை, தேர்வு செய்யப்படவேண்டிய ஒரு … Read more

ரூ.26,000 கோடி ஒதுக்கீடு ஆப்கன் மக்கள் எதிர்ப்பு| Dinamalar

காபூல்-அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு, ஆப்கனுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து, காபூலில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். கடந்த 2001 செப்., 11ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம், தெற்காசிய நாடான ஆப்கனில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி பின்லேடன் உத்தரவில் தகர்க்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கனுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது.இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து, இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் … Read more