மீரா ஜாஸ்மினை வரவேற்ற கீர்த்தி சுரேஷ்

2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக … Read more

போர் மூளும் அபாயம்- உக்ரைனில் இருந்து ரஷ்யர்கள் வெளியேற்றம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற கிரெம்லின் வட்டாரம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனில் வசித்துவரும் தங்கள் நாட்டுக் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்படும் அபாயம் உள்ளதால் ரஷ்யாவும் உக்ரைனில் உள்ள தங்களது நாட்டு பிரதிநிதிகளை மீண்டும் மாஸ்கோவுக்கு திரும்ப அழைத்துக் … Read more

வகுப்பறை பற்றாக்குறை: எம்.எல்.ஏ., நடவடிக்கை| Dinamalar

புதுச்சேரி : வம்பாகீரப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நிலவிய வகுப்பறை பற்றாக்குறையை தீர்க்க அனிபால் கென்னடிஎம்.எல்.ஏ., நடவடிக்கை மேற்கொண்டார்.உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம், தஷ்ணாமூர்த்தி அரசு நடுநிலை பள்ளி வகுப்பறைகளில் பொதுமக்களுக்கு வழங்க குடிமைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் வரண்டாவில் அமரந்து பயிலும் சூழல் நிலவியது.தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, பெண் கல்வி துணை இயக்குனர் நடன சபாபதியை நேரில் சந்தித்து, வாம்பாகீரபாளை யம் பொதுமக்களுக்கு அரிசிவிநியோகம் செய்து முடிக்கும் வரை … Read more

40 வருடங்களாக ஒதுங்கி இருந்த தயாரிப்பு நிறுவனத்தை மீட்டெடுத்த இயக்குனர் சகோதரர்கள்

சமீபத்தில் மலையாளத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான ஹிருதயம் படம் 20 நாட்களை கடந்து தற்போதும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தின் வெற்றி மற்றும் வசூலால் மகிழ்ச்சியில் இருக்கிறது படத்தை தயாரித்த மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனம். இந்தப்படத்தை தயாரித்துள்ள விசாக் சுப்பிரமணியன் என்பவர் பழம்பெரும் தயாரிப்பாளர் பி.சுப்பிரமணியம் என்பவரின் பேரன் ஆவார்.. மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மேரிலேண்ட் ஸ்டுடியோ நிறுவனத்தை துவங்கி கிட்டத்தட்ட 69 படங்களை … Read more

உக்ரைனில் இருந்து வெளியேறும் அமெரிக்க துாதரக அதிகாரிகள்| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக அமெரிக்க துாதரக அதிகாரிகள் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் எல்லையில், 1.30 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. அத்துடன் அண்டை நாடான பெலாரசில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், உக்ரைனின் இருபுறம் உள்ள கடல் பகுதியில் ரஷ்யா தன் போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. … Read more

சரண்யா மோகனிடம் சிம்பு பரத நாட்டியம் கற்றுக்கொண்டது எப்படி

சில நாட்களுக்கு முன் நடிகர் சிம்பு தனது எடைக்குறைப்பு பயண வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். உடற்பயிற்சி, யோகா, நடனம் என பல பயிற்சிகளை மேற்கொண்டு 105 கிலோ இருந்த தனது உடல் எடையை 72 கிலோவாக குறைதுள்ளார் சிம்பு. இதற்காக 2020ல் லாக்டவுன் சமயத்தில் கேரளா சென்ற சிம்பு, பயிற்சியின் ஒரு பகுதியாக பரதநாட்டியத்தையும் கற்றுகொண்டு வந்துள்ளார். சிம்புவுக்கு குருவாக இருந்து இதை கற்றுக்கொடுத்தவர் நடிகை சரண்யா மோகன். யாரடி நீ மோகினி, வேலாயுதம் படங்களில் தங்கையாக … Read more

கல்வி, சுகாதார துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு…அதிகரிக்குமா? கூடுதல் வரி நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை| Dinamalar

நாட்டில் பல ஆண்டுகளாக நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துவோரிடம் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. இது எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறதோ அதை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை தான் உள்ளது. கடந்த 2007 – 08ம் நிதியாண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்விக்காக, 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் கல்விக்கான கூடுதல் வரி, 3 சதவீதமாக உயர்ந்தது. இந்த கூடுதல் வரி மூலம் வசூலான தொகையில், … Read more

பேமிலி டூர் ; நீண்டநாள் கடன் தீர்த்த பூஜா ஹெக்டே

பத்து வருடங்களுக்கு முன் முகமூடி படம் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, ஒருகட்டத்தில் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்.. ஆனால் இன்றோ தனது தொடர் வெற்றிகள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் என பலரும் தங்களது முதல் சாய்ஸாக விரும்பும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. அந்தவகையில் தமிழில் விஜய்யுடன் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் தெலுங்கில் பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் என பூஜா ஹெக்டே நடித்துள்ள … Read more

செல்பி எடுத்து அனுப்பியது நாசாவின் டெலஸ்கோப்| Dinamalar

கேப் கனவரல்:அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ள பிரமாண்ட ‘டெலஸ்கோப்’ எனப்படும் தொலைநோக்கி, நட்சத்திர ஒளியின் முதல் படத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், ‘செல்பி’ எடுத்தும் அனுப்பி வைத்துள்ளது. விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய ‘ஹப்பிள்’ என பெயரிடப்பட்ட டெலஸ்கோப்பில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ‘ஜேம்ஸ் வெப்’ என்ற புதிய டெலஸ்கோப்பை விண்வெளியில் நாசா நிறுவி உள்ளது. கடந்த டிசம்பரில் அனுப்பப்பட்ட இந்த டெலஸ்கோப்பின் பாகங்கள் பொருத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.பூமியில் இருந்து, … Read more