பிப்., 16 முதல் தியேட்டர்கள் 100 சதவீதம் இயங்க அனுமதி

கொரோனா ஒமிக்ரான் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என கடந்த ஜனவரி மாதத் துவக்கத்திலிருந்தே அமல்படுத்தப்பட்டது. கடந்த வாரங்களில் தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நேற்று வெளியான படங்களின் நிலை என்ன என்பது இன்றும், நாளையும் தான் தெரியும். தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பிப்ரவரி 15ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் … Read more

சாத்தானாக மாறிய விக்ராந்த்

விஜய்யின் நெருங்கிய உறவினர் விக்ராந்த். அவரைப்போன்ற சாயலுடன் கற்க கசடற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு நினைத்து நினைத்து பார்த்தேன், நெஞ்சத்தை கிள்ளாதே, முதன் கனவே உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். சில படங்களில் நெகட்டிவ் ஷேட் உள்ள குணசித்ர வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த பக்ரித் படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் … Read more

மாவட்டத்திற்கு ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேசன் பார்லி குழு பரிந்துரை| Dinamalar

புதுடில்லி: போலீஸ் துறையில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள பார்லிமென்ட் குழு, மாவட்டத்திற்கு ஒரு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்பட வேண்டும் என பரிந்துரை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை அமைச்சகம் தொடர்பான பார்லிமென்ட நிலைக்குழு கடந்த வாரம் அறிக்கை அளித்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள போலீஸ் துறையில், பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தற்போது10. 3 சதவீதம் … Read more

15 நாளில் ஒடிடிக்கு வந்த கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி

நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்து கடைசியாக வெளியான தெலுங்கு படமான குட்லக் சகியை மிகவும் எதிர்பார்த்தார். அதுவும் தியேட்டரில் போதிய வரவேற்பு இல்லாமல் வெளியான 15வது நாளில் ஓடிடி தளத்திற்கு வருகிறது. நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப் செய்யப்பட்டுள்ளது. பலமுறை தள்ளி … Read more

பரத் நடித்த நடுவன்: நாளை ஒளிபரப்பாகிறது

பரத் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் நடுவன். இதில் அபர்னா வினோத், கோகுல் ஆனந்த், ஜார்ஜ் மரியான், யோக் ஜேப்பி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஷரண் குமார் இயக்கிய இந்த படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார், தரண்குமார் இசை அமைத்திருந்தார். ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற படம். நண்பனின் தேயிலை எஸ்டேட்டில் மேனேஜராக இருக்கும் பரத் எப்போதும் தன் வேலையிலேயே கவனமாக இருப்பார். எஸ்டேட் வளர்ச்சிக்கு கடுமையாக உழைப்பார். ஆனால் நண்பனுக்கும், பரத்தின் … Read more

உக்ரைனை விட்டு அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் கோரிக்கை| Dinamalar

வாஷிங்டன்:ரஷ்யாவால் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாடு திரும்பும்படி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அணியில் சேர எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் எல்லையில், 1.30 லட்சம் ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் எழுந்துள்ள போர் பதற்றத்திற்கு இடையே, ரஷ்யா, அதன் கிழக்கு எல்லையில் உள்ள பெலாரஸ் நாட்டுடன் கூட்டு போர் பயிற்சியை துவக்கியுள்ளது.ஏவுகணைகள், … Read more

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் அமோகம்| Dinamalar

பெங்களூரு: ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று (பிப்.,12) துவங்குகியது. இதில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.12.25 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்துள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் 15வது சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் என, 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ, குஜராத் என இரு புதிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான … Read more

தமிழில் வெளிவரும் மஹாவீர்யார்

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் எழுதிய கதையை தழுவி உருவாகும் படம் மஹாவீர்யார். நிவின் பாலி நடித்து அவரது நண்பர் சம்னாசுடன் இணைந்து தயாரிக்கிறார். அப்ரித் ஷைனி இயக்கும் இப்படத்தில் ஆஷிப் அலி, லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் ஷி குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு உள்பட பலர் நடித்துள்ளனர். சந்துரு … Read more