உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நந்திதா

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி, இடம் பொருள் ஏவல், அஞ்சல, உள்குத்து, தேவி2, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நந்திதா சமீபகாலமாக சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். இது தொடர்பான படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்த நெட்டிசன்கள் இப்போதுதான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று ஒரு பக்கம் புகழ்ந்தாலும் ஒரு சிலர் கேலியும் செய்து, இனி அக்கா, … Read more

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்க குவாட் அமைப்பு உறுதி

மெல்பர்ன்:’இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்’ என, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும், ‘குவாட்’ அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆக்கப்பூர்வமான முடிவு அங்கு, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற, குவாட் மாநாட்டில் பேசினார்.மாநாடு துவங்குவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை, ஜெய்சங்கர் உட்பட … Read more

இந்தியா ஹாட்ரிக் வெற்றி * கோப்பை கைப்பற்றி அசத்தல்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது இந்தியா. மூன்றாவது போட்டியில் 96 ரன்னில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தன. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி … Read more

ஜீ தமிழில் காதலர் தினம் கொண்டாட்டம்

இன்னும் சில நாட்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் எங்கும் காதல் பற்றிய பேச்சே உள்ளது. நேயர்களின் மனதை புரிந்து கொண்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டு இன்ப அதிர்ச்சிகளை தர உள்ளது. முதலாவதாக வரும் பிப்ரவரி 13ல் 1:30 மணிக்கு, 'காதல் சங்கமம்' – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது. இந்த 2 மணிநேர சிறப்பு நிகழச்சியில் செம்பருத்தி, சத்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய தொடர்களை சேர்ந்த ஜோடிகளின் காதல் கதைகள் காட்டப்படவுள்ளன. … Read more

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்க ஆய்வு| Dinamalar

டொரன்டோ:கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக பல புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கட்டுரை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் வாய் … Read more

டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் பதவி காலம் நீட்டிப்பு| Dinamalar

புதுடில்லி: டாடா குழுமத்தின்,’ ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரின் பதவிக் காலம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா குழுமத்தின்,’ஹோல்டிங்’ நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகஎன். சந்திரசேகரன் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ், டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் சந்திரசேகரின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , டாடா குழுமத்தின் வாரிய கூட்டம் இன்று நடந்தது. … Read more

ரக்ஷித்தா மஹாலெட்சுமியின் 'சொல்ல மறந்த கதை'

பிரபல நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி புதிய தொடர் ஒன்றின் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். தமிழில் விஜய் டிவியின் 'பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான ரச்சிதா தென்னிந்திய மொழிகளில் சீரியல்கள் நடித்து வந்தார். கடைசியாக 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் நடித்து வந்த இவர் திடீரென சீரியலை விட்டு விலகினார். கன்னட மொழியில் 'ரங்கநாயகா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த படம் … Read more

பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு மீண்டும் கொரோனா தொற்று| Dinamalar

லண்டன்:மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 73, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்திருப்பதாவது:காலையில் வந்த பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இளவரசர் சார்லஸ் நேற்று முன் தினம் மாலை லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏராளமானோரை சந்தித்துப் … Read more

செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க மனு | Dinamalar

பெங்களூரு-பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க, கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை கமிஷனர் கோரிக்கை வைத்துள்ளார்.பல்கலைக்கழக பட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வுகளை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டுமென உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலரிடம், கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை கமிஷனர் பிரதீப் கோரிக்கை மனு அளித்துள்ளார்.கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:கொரோனா மூன்றாம் அலை மற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவு செய்ய முடியவில்லை.ஆனால் சில பல்கலைக்கழகங்கள் தேர்வுகளுக்கான கால அட்டவணையை நிர்ணயித்துள்ளன. பாட திட்டங்களை முழுமையாக முடிக்க … Read more