தினமலர்
'நான் தான் ராணி' – மகேஸ்வரி
சின்னத்திரை ரசிகர்களுக்கு மகேஸ்வரி பற்றிய அறிமுக தேவையில்லை. வீஜேவான இவர் தொடர்ந்து சின்னத்திரையில் ஹீரோயினாகவும் தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தமட்டில் கணவருடன் விவாகரத்து பெற்று மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த கசப்பான அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி இன்று இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது ஹாட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கருப்பு சோபாவில் … Read more
மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்க ஆய்வு| Dinamalar
டொரன்டோ : கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக பல புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கட்டுரை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கொரோனா … Read more
ரேஞ்சருக்காக உருவாகும் கிராபிக்ஸ் புலி
பர்மா, ராஜா ரங்குஸ்கி, ஜாக்சன் துரை படங்களுக்கு பிறகு தரணிதரன் இயக்கும் படம் ரேன்ஞ்சர். சிபிராஜ், ரம்யா நம்பீசன், காளி வெங்கட், மதுஷாலினி நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் காட்டிலாகா அதிகாரியாக நடித்திருக்கிறார் சிபிராஜ் . புலிவேட்டையை கதை களமாக கொண்ட படம். தற்போது கிராபிக்சில் புலியை உருவாக்கி அதை படத்தின் காட்சிகளோடு இணைக்கும் பணி நடந்து வருகிறது. படத்தில் புலி ஒரு கேரக்டராகவே வருகிறது. … Read more
40 செயற்கை கோள்களை அழித்த மின் காந்தப் புயல்| Dinamalar
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சில தினங்களில், 40 செயற்கை கோள்கள், திடீரென ஏற்பட்ட மின்காந்தப் புயலால் எரிந்து சாம்பலாயின. அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்க்கின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சுற்றுலா, இணைய சேவை உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் உலகளவில் இணைய வசதியை ஏற்படுத்த, 2,000க்கும் மேற்பட்ட, ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த வாரம் மட்டும் அது, 49 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கை கோள்களை … Read more
‛சத்தியமா எனக்கு கல்யாணம் இல்லை' – நம்புங்க என்கிறார் பிரேம்ஜி
இசை அமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி. காமெடியனாக நடித்து வரும் பிரேம்ஜி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையும் அமைத்தும் உள்ளார். இவர் திருமணம் செய்ய மாட்டேன் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் அவரும் பாடகி வினய்தாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வைத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால் இதனை பிரேம்ஜி மறுத்துள்ளார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் … Read more