3 மாதங்களில் ஒயிட் டாப்பிங் பணி முடியும்!| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் சுமுகமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள், பல இடையூறுகளுக்கு பின், இறுதி கட்டத்தை எட்டியதால், வாகன பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இன்னும் மூன்று மாதங்களில் தான் பணிகள் முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் இருதய பகுதிகள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகள் பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகன பயணியர் அவதிப்பட்டனர். விபத்துகளும் நடந்தன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், 2018ல் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, சாலை மீது சிமென்ட் காங்கிரீட் கலவை பூசப்பட்டது.பணிகள் … Read more

முதல் சிங்கிள் மோதலுக்குத் தயாராகும் விஜய், மகேஷ் பாபு ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் விஜய் எந்த அளவுக்கு ரசிகர்களை வைத்திருக்கிறாரோ, அதே அளவிற்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை வைத்திருப்பவர் மகேஷ்பாபு. இவரது சில படங்களை விஜய் ரீமேக் செய்து வெற்றி பெற்றதால் மகேஷ் பாபு, விஜய் இருவரது இடையிலான ஒப்பீடு அடிக்கடி சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது. விஜய், மகேஷ் பாபு ஆகியோரது ரசிகர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இதனிடையே, விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், மகேஷ் பாபு நடித்து … Read more

கோவிட்; இந்தியாவில் மேலும் 1.67 லட்சம் பேர் குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.67 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,084 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,24,78,060 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,67,882 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை … Read more

ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போகும் தி பவர் ஆப் தி டாக்

திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. விருது போட்டிக்கு தகுதி பெறும் படங்களின் பட்டியலை ஆஸ்கர் விழாக்குழு அறிவித்துள்ளது. பெல்பாஸ்ட், கோடா, டோண்ட் லாக்அப், டிரைவ் மை கார், டியூன், கிங் ரிச்சர்ட், லிகோரியா பீட்சா, நைட்மேர் அலே, தி பவர் ஆப் டாக், வெஸ்ட் சைட் ஸ்டோரி ஆகிய படங்கள் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் தி பவர் ஆப் தி … Read more

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை: புதிய வழிகாட்டுதல்கள்| Dinamalar

புதுடில்லி: மத்திய அரசு திருத்தப்பட்ட கோவிட் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதை நீக்கி, அதற்கு பதிலாக 14 நாட்கள் தொற்று அறிகுறிகள் காணப்படுகிறதா என சுய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 திங்கள் முதல் அமலுக்கு வரும். தொடர்ந்து மாறிவரும் கோவிட் வைரசை கண்காணிக்க வேண்டியது அவசியம். … Read more

சிம்பு வழக்கில் விஷால் பெயரை நீக்க கோர்ட் மறுப்பு

சிம்பு நடித்த 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்' படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிம்பு தலையீட்டால் தனக்கு 9 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு புகார் கொடுத்ததாக மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு சென்னை உயர்நீதி … Read more

வீடு கட்டிய பிறகு வசூலிக்க வந்த அதிகாரிகள்| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் டெபாசிட் செய்தனர். இது, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கருதிய அந்த விவசாயி, அதில் ரூ.9 லட்சம் எடுத்து வீடு கட்டினார். தற்போது, தவறை உணர்ந்த வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பி அளிக்கும்படி விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர், அப்பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி … Read more

35 கிலோ வெயிட் குறைத்த இசையமைப்பாளர் தமன்!

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான தமன், அதன் பிறகு ஷங்கர் தயாரித்த ஈரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். சமீபகாலமாக தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் தமன் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படத்திற்கும் இவர் தான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 135 கிலோ வெயிட் இருந்த … Read more