புதுச்சேரி கலால் வருவாய் 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது| Dinamalar

புதுச்சேர-புதுச்சேரி கலால் வருவாய், முதல் முறையாக 1000 கோடி ரூபாயை எட்ட உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கள்ளுக்கடைகள்-50, சாராயக்கடைகள்-80, மதுபான கடைகள்-284 என மொத்தம் 414 கடைகள் உள்ளன.மாநிலத்தின் வருவாய், கலால் துறையை பெரிதும் சார்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல், கலால் வருவாயை பெரிதும் பாதித்தது.கடந்த 2019-20 ம் ஆண்டு கலால் வருவாய் 857 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 81.70 கோடி ரூபாய் அளவிற்கு சாராயம் விற்பனையாகி இருந்தது. 2020-21 ம் ஆண்டில் கொரோனா தொற்று … Read more

‛ராக் வித் ராஜா' – சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி

தலைமுறை கடந்து வாழும் இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம். ஏராளமான இசை கச்சேரிகள் நடத்தி உள்ளார். சென்னையை தொடர்ந்து சிங்கப்பூரில் நடக்க இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கொரோனாவால் தடைபட்டது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் சென்னையில் மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள அந்த நிகழ்ச்சிக்கு, ராக் வித் ராஜா என தலைப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

வறட்சி மாநிலம்: நாகாலாந்து அறிவிப்பு| Dinamalar

கோஹிமா : பருவ மழை தப்பி விவசாயம் கேள்விக்குறி ஆனதால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பயிர்கள் வாடி பாழ்பட்டுள்ள விவசாய நிலங்களை பேரிடர் மேலாண்மை ஆணைய துணை கமிஷனர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், செப்., 2021 முதல், மார்ச் 2022 வரையிலான ஆறு மாதங்களை, மாநிலம் முழுதும் மிதமான வறட்சி பாதித்த காலமாக, மாநில … Read more

மம்முட்டியின் சிபிஐ-5ஆம் பாகத்தில் இணைந்த கனிகா

மம்முட்டி நடிப்பில் கடந்த முப்பது வருடங்களில் நான்கு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு. தற்போது இந்தப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கே.மது இயக்கிவரும் இந்தப்படத்தில் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தி உள்ளார் கனிகா. மஞ்சு வாரியரை போலவே ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய கனிகா, … Read more

பிரிட்டனில் எரிவாயு விலை வரலாறு காணாத உயர்வு| Dinamalar

லண்டன் : பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயுவிற்கான தேவை அதிகரிப்பால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தொழில் துறை முடங்கியது. தேவை மற்றும் சப்ளை குறைந்தது.இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறைகளில் எரிவாயு பயன்பாடு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, … Read more

ஸ்ரீவள்ளியை பாடிய எம்மா ஹீஸ்டர்ஸ்

உலக புகழ்பெற்ற பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ். டச்சு நாட்டுக்காரர். இவரது பாடல்கள் உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை ஆங்கிலமும், ஹிந்தியும் கலந்து பாடி வீடியோ வெளியிட்டிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் உலகம் முழுக்க பரவி உள்ளது. பல முன்னணி பாடகர்கள், பாடகிகள் அதனை பாடி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். … Read more

சுகாதாரம் முதல் சுற்றுச்சூழல் வரை மக்களுடன் இணைந்துள்ள காமிக்ஸ்| Dinamalar

பெல்பாஸ்ட்:சுகாதாரம் முதல் சுற்றுச்சூழல் வரை, ‘காமிக்ஸ்’ மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது.காமிக்ஸ் எனப்படும், சித்திரங்கள் வாயிலாக கதைகளை காட்சிப்படுத்தும் முறை, உலகம் முழுதும் மிகவும் பிரபலம். பாரம்பரியமிக்க இந்த காமிக்ஸ், 1920ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. பின், 1960களில், சூப்பர் ஹீரோக்கள் வலம் வந்த கற்பனை கதைகள் வாயிலாக, காமிக்ஸ் புதிய பரிமாணத்தை பெற்றது.தற்போது, இந்த காமிக்ஸ் வாயிலாக பல்வேறு தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. உடல்நலன் சார்ந்த தகவல்கள், காமிக்ஸ் வடிவத்தில் அனைவரிடமும் … Read more

நடிகர் மோகன் சர்மாவுக்கு கொலை மிரட்டல் : போலீசில் புகார்

தென்னிந்திய சினிமாவில் குணசித்ர நடிகராக இருப்பவர் மோகன் சர்மா. தமிழில் ஏணிப்படிகள், கண்ணெதிரே தோன்றினாள். அப்பு, பிரண்ட்ஸ், சச்சின், தவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கிராமம் என்ற மலையாள படத்தையம், நம்ம கிராமம் என்ற தமிழ் படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் கேரள அரசின் விருதை பெற்றது. மோகன் சர்மா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:ஒரு நாள் நான் வெளியில் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஐ.நா., இரங்கல்| Dinamalar

நியூயார்க்:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த, இந்திய பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த 6ம் தேதி காலமானார். திரை இசைத் துறையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.அவருடைய மறைவுக்கு ஐ.நா., சபைபொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:இந்திய துணை கண்டத்தின் குரலாக அறியப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், இந்திய … Read more