தொடரை கைப்பற்றியது இந்தியா| Dinamalar

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் தேர்வானார். விண்டீஸ் ரெகுலர் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். … Read more

வர்ஷினி அர்ஷா தான் இனி புதிய பூவரசி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'பூவே உனக்காக'. பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடரில் சமீபத்தில் நடிகை சாயா சிங்கும் இணைந்தார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த தொடரிலிருந்து கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி திடீரென விலகிவிட்டார். இந்நிலையில் இந்த தொடரில் புதிய பூவரசியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. தற்போது ராதிகா ப்ரீத்திக்கு இணையாக வர்ஷினி அர்ஷா என்ற மற்றொரு அழகியை கண்டுபிடித்து பூவரசியாக நடிக்க வைக்கவுள்ளனர். … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஸ்டார் ஆக முடியாது : ரேகா பேச்சு

திரைப்பட இயக்குநரும், பாடலாசிரியருமான எம்.ஜி.வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா பேசியதாவது : நமக்குத் தட்டிக் கொடுக்கவும் ஊக்கப்படுத்தவும் யாராவது ஒருவர் உடன் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியே செல்லாதீர்கள் என்று ரொம்பவே பயமுறுத்துகிறார்கள். எனவே நான் எங்கும் வெளியில் செல்லாமல் இருந்தேன். என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்து விட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே … Read more

பாஸ்டேக் மூலம் ரூ.26 ஆயிரம் கோடி வசூல்: மத்திய அமைச்சர் தகவல்| Dinamalar

புதுடில்லி: கடந்த ஜனவரி மாதம் வரை பாஸ்டேக் மூலமாக ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார். சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்காக சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் பாஸ்ட்டேக் வசதி நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக, ‘பாஸ்டேக்’ எனப்படும், மின்னணு அட்டைகள் வழங்கப்படுகின்றன. பாஸ்ட்டேக் மூலம் பெறப்படும் வருவாய் தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி … Read more

பிழையின்றி ஆங்கிலம் பேச பிரியாமணிக்கு டிக்சனரி வாங்கிக்கொடுத்த அஜய் தேவ்கன்

நடிகை பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் விராட பர்வம் மற்றும் ஹிந்தியில் மைதான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஹிந்தியில் இவர் நடிக்கும் மைதான் படம் கால்பந்து விளையாட்டு பின்னணியில் அறுபதுகளில் நிகழும் கதை. பிரபல கால்பந்து கோச் சையது அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோச் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக பிரியாமணியும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் கதாபாத்திரம் பற்றி பிரியாமணி கூறும்போது, … Read more

ஹாக்கி: இந்தியா கலக்கல் வெற்றி| Dinamalar

போட்செப்ஸ்ட்ரூம்:புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 5-0 என பிரான்சை வீழ்த்தியது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்களுக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. 9 அணிகள் மோதும் இதன் மூன்றாவது சீசன் தற்போது நடக்கிறது. இதற்காக தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் பிரான்சை சந்தித்தது. இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 200 வது போட்டியில் களமிறங்கினார்.போட்டியின் 21, 24 வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில், … Read more

இந்திய அணி 237 ரன்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாச இந்திய அணி 50 ஓவரில் 237 ரன் எடுத்தது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் தேர்வானார். விண்டீஸ் ரெகுலர் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். … Read more

2 மில்லியன் பாலோயர்கள் ; மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்

வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன் சினிமாவில் களமிறங்கியவர் தான் இயக்குனர் பிரியதர்ஷன் – நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி.. தெலுங்கில் அறிமுகமானாலும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தான் பிஸியாக நடித்து வருகிறார் கல்யாணி. சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான மாநாடு, மலையாளத்தில் வெளியான ஹிருதயம் மற்றும் ப்ரோ டாடி ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுள்ளார். தவிர சோஷியல் மீடியாவிலும் கல்யாணி … Read more

பாகிஸ்தானில் ஹீலர் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அடித்துக் கொண்ட கர்ப்பிணி| Dinamalar

பெஷாவர்: ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான பாகிஸ்தானிய கர்ப்பிணி பெண் ஒருவர் மாய, மந்திரங்களை பயிற்சி செய்யும் ஹீலர் ஒருவரின் பேச்சை கேட்டு, ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் நெற்றியில் ஆணி அடித்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் வழிபாடுகள் மாய மந்திரங்கள் மூலமாக நோயை குணப்படுத்தும் ஹீலர் உள்ளனர். அறிவியலை நம்ப மறுக்கும் ஒரு கூட்டம் இதுபோன்ற பேர்வழிகளின் பேச்சை உடனே நம்பிவிடுகின்றது. அந்த … Read more