ஒயின் விற்பனை: அன்னா ஹசாரே போராட்டம்| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், … Read more

சாதனை படைத்த பாலகிருஷ்ணாவின் ஓடிடி நிகழ்ச்சி

'புஷ்பா' நாயகனாக அல்லு அர்ஜுன் குடும்பத்தாருக்குச் சொந்தமான ஓடிடி நிறுவனம் 'ஆஹா'. இந்நிறுவனம் தற்போது இந்திய ஓடிடி சந்தையில் சர்வதேச ஓடிடி நிறுவனங்களான அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுடன் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளது. தற்போது பல தமிழ்ப் படங்களையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளது. சமுத்திரக்கனி நடித்த 'ரைட்டர்' படம் நாளை மறுநாள் பிப்ரவரி 11ம் தேதி இந்த ஓடியில் வெளியாக உள்ளது. அடுத்து சரத்குமார் நடிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ள 'இரை' என்ற ஓடிடி … Read more

பள்ளி நிதியில் ரூ.6.23 கோடியை சூதாட்டத்திற்காக சுருட்டிய கன்னியாஸ்திரி| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கத்தோலிக்க பள்ளியின் நன்கொடை பணத்தில் இருந்து ரூ.6.23 கோடி திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த மேரி மார்கரெட் க்ரூப்பர் (வயது 80) என்ற கன்னியாஸ்திரி, செயின்ட் ஜேம்ஸ் கத்தோலிக்க பள்ளியில் 10 ஆண்டுகாலம் முதல்வராக இருந்துள்ளார். அப்போது தான் 8,35,000 டாலர் (ரூ.6.23 கோடி) திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளார். திருடிய பணத்தை அந்த கன்னியாஸ்திரி சூதாட்டத்திற்கும், கோடையில் சுற்றுலாப் பயணிகள் கூடிவரும் லேக் தஹோ ரிசார்ட்டுகளுக்கு செல்வதற்கும் மற்றும் குளிர்காலத்தில் … Read more

இந்தியாவின் ஒரே ஆஸ்கர் நம்பிக்கை

94வது ஆஸ்கர் விருதுகளுக்காக கடைசியாக தேர்வான படங்கள், கலைஞர்களின் நாமினேஷன் பட்டியல் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்த் திரைப்படமான 'ஜெய் பீம்' படம் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், இறுதிப் பட்டியலில் அந்தப் படம் இடம் பெறவில்லை. இருப்பினும் இந்தியப் படங்களுக்கான ஆஸ்கர் கனவு இன்னுமொரு நம்பிக்கையில் இருக்கிறது. சிறந்த டாக்குமென்டரிப் படங்களுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட 'ரைட்டிங் வித் பயர்' என்ற படம் இறுதிப் போட்டிக்குத் … Read more

பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் போப்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாடிகன்: சிறார் பாலியல் தொல்லை விவகாரத்தில் முன்னாள் போப் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவாலய தலைமையத்தில் கடந்த 1980ஆம் ஆண்டு தேவாலயத்தில் இருந்த பாதிரியார்கள் சிலரால் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக முன்னதாக செய்தி வெளியானது. இது பெரும் கண்டனத்தை பெற்றது. உலகம் முழுக்க சமூகவலைதளத்தில் முனீச் கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் மீது சர்ச்சை எழுந்தது. … Read more

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Dinamalar

ஜெனிவா: ஒமைக்ரானுக்கு அடுத்ததாக வரும் கொரோனா திரிபுகள் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும். கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது. மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது. கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட தீவிரமாக … Read more

'பான்–வேர்ல்டு' பாடலாக வரப் போகும் 'பீஸ்ட்' முதல் சிங்கிள்

தென்னிந்தியத் திரையுலகத்தில் 'பான்–இந்தியா' என்ற வார்த்தை கடந்த சில வருடங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தெலுங்கில் வெளியான 'பாகுபலி' படங்களுக்குப் பிறகுதான் இது அதிகமானது. 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ் அதன்பின் பான்–இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்தார். சமீபத்தில் 'புஷ்பா' படத்தின் வெற்றி மூலம் அல்லு அர்ஜுனும் பான்–இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்துள்ளார். அவர்களைப் போல இன்னும் பல தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு பான்–இந்தியா ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. வரும் காலங்களில் ஹிந்தி … Read more

பாக்., மீது இந்தியா தாக்கு| Dinamalar

நியூயார்க்: அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாத குழுக்கள், ஐ.நா.,வின் தடைக்கு அஞ்சி மனிதநேய அமைப்புகள் போல உருமாறி செயல்பட்டு வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பொருளாதார தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: ஐ.நா., விதிக்கும் பொருளாதார தடைகள் ஒரு நாட்டில் சட்டப்பூர்வமாக மக்களுக்கு கிடைக்கும் உரிமைகளை தடுப்பதாக இருக்கக் கூடாது.அதேசமயம், பயங்கரவாத குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு மனிதநேய அடிப்படையில் சலுகைகள் வழங்கும்போது … Read more