15 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு தடுப்பூசி நிபுணர் குழு அறிவுரைப்படி முடிவு| Dinamalar

புதுடில்லி :நிபுணர் குழு அறிவுரைப்படி, 15 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 கோடி பேர் நேற்று ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:தற்போது நாடு முழுதும், 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இப்பிரிவில் இதுவரை, 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடி பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுஉள்ளது.பள்ளிகள் திறக்கப்படுவதால், 15 வயதிற்கு உட்பட்டோருக்கு … Read more

அண்ணாமலையாரை தரிசனம் செய்த அருண் விஜய்

அருண் விஜய்க்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டு. அவர் நடித்து முடித்துள்ள 5 படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அக்னிச்சிறகுகள், சினம், யானை, பார்டர், ஓ மை டாக் படங்கள் வெளிவருகின்றன. மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் அருண் விஜய் அண்ணாமலையார் தரிசனத்துக்காக திருவண்ணாமலை சென்றார். முதல்நாள் இரவு கிரிவலம் சென்ற அவர் மறுநாள் காலை கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது கோயில் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அவருடன் படம் எடுத்துக் கொண்டனர். … Read more

பீம் பாய் நடிகர் பிரவீன்குமார் சோப்தி காலமானார்| Dinamalar

சென்னை: மகாபாரத தொடரில் பீமனாக நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் பிரவீன் குமார் சோப்தி,74 நேற்று மாரடைப்பால் காலமானார். 1988 களில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் தொடர்கள் ஒளிபரப்பாயின. அக் காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதில் மகாபாரத தொடரில் ‘பீமன்’ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் பிரவீன் குமார் சோப்தி 74, அந்த சீரியலுக்கு பின் 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிபடங்களில் நடித்துள்ளார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘மைக்கேல் … Read more

நடிகர்களின் யோசனையை இயக்குனர்கள் கேட்க வேண்டும்: ஸ்ரீகாந்த் பேச்சு

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'தி பெட்'. வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கோகுல் ஒளிப்பதிவு … Read more

தோல்விகளுக்குப் பதில் சொல்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ஆனால், தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'மகாநடி' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 8 படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. விஜய்யுடன் நடித்த 'சர்க்கார்' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த 'குட் லக் சகி' படம் கூட தோல்வியடைந்தது. தொடர்ச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்தது குறித்து சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. … Read more

புது சீரியல் நிறுத்தமா

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனித்துவமான முறையில் கதை சொல்லி ரசிகர்களை ஈர்த்து வந்தது விஜய் டிவி. ஆனால், விஜய் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தொடர் ஒன்று ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஜின், சரண்யா துராடி, லதா, நிரோஷா, விக்னேஷ் என நடிகர் பட்டாளத்துடன் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்த தொடர் 'வைதேகி காத்திருந்தாள்'.கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் சரியாக 37 எபிசோடுகள் வரை மட்டுமே … Read more

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா – ரஷ்யா மோதல்

நியூயார்க் : பொருளாதார தடை விதிப்பு தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் காரசாரமாக மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. ரஷ்யா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நாடுகள் மீதான பொருளாதார தடையால் ஏற்படும் பயன்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது ஐ.நா.,வுக்கான ரஷ்ய துணை துாதர் டிமிட்சி போலியன்ஸ்கி பேசியதாவது:ஐ.நா., 14 நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் இந்நாடுகளின் வளர்ச்சி … Read more

நாங்கெல்லாம் அப்பவே அப்படி : கெத்து காட்டிய மணிமேகலை

சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலைக்கு, அவரது துடுக்குத்தனமான ஆட்டிடியூட் மற்றும் பேச்சு சாமர்த்தியத்திற்காக பலரும் ரசிகர்களாக உள்ளனர். வீஜே கேரியரை ஸ்டார்ட் செய்த அவர், திருமணத்திற்கு பிறகு சிறு ப்ரேக் எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் இறங்கி அடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதனையடுத்து சில ஸ்பெஷல் ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபகாலங்களில் பட்டிமன்ற மேடைகளிலும் ஆக்டிவாக இருக்கும் தனது திறமையான … Read more