50 நாட்களில் ரூ.365 கோடி வசூலித்த 'புஷ்பா'

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'புஷ்பா'. தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியானது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதிலும் ஐந்து மொழிகளையும் சேர்த்து 365 கோடி வசூலித்துள்ளதாக படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. … Read more

துாதரக கழிப்பறையில் ரகசிய கேமரா | Dinamalar

பாங்காக்,-தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய துாதரகத்தில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய ‘கேமரா’க்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துாதரக முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக். இங்கு ஆஸ்திரேலிய துாதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த துாதரகத்தின் பெண்கள் கழிப்பறையில் கேமரா பதிவு செய்யும் படங்களை சேமிக்க உதவும் ‘கார்டு’ இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இதை தொடர்ந்து துாதரகங்களில் உள்ள கழிப்பறைகளில் சோதனை நடந்தது. அப்போது பெண்கள் கழிப்பறையில் உளவு … Read more

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம் | Dinamalar

மும்பை,-கொரோனா பாதிப்பால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதனால் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஓரளவு குணமடைந்தார். … Read more

பூவே உனக்காக சீரியலை விட்டு விலகிய கதாநாயகி

ஹிட் தொடர்களில் ஒன்று 'பூவே உனக்காக'. இதில் அஜய் ரத்தினம், விக்னேஷ், தேவி ப்ரியா உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் இந்த தொடரில் நடிகை சாயா சிங் சமீபத்தில் இணைந்து நடித்து வருகிறார். வில்லியாக அவர் காட்டும் ஆக்ஷன்கள் டிஆர்பிக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். தற்போது இந்த தொடர் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தொடரின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி சீரியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பூவே உனக்காக … Read more

மன்ஹாட்டனில் காந்தி சிலை சேதம்; அமெரிக்க போலீஸார் விசாரணை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மன்ஹாட்டன்: அமெரிக்காவின் மன்ஹாட்டனில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அருகே உள்ள யூனியன் ஸ்கொயர் பகுதியில் எட்டு அடி உயர மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்திய-அமெரிக்க தூதரகங்கள் இடையே இச்செய்தி மிகப் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இதுகுறித்து … Read more

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.| Dinamalar

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஆளுங்கட்சியான தி.மு.க., 16 வார்டுகள், அ.தி.மு.க., 17 வார்டுகள், பா.ம.க., 7 வார்டுகள், பா.ஜ., 11 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ., கட்சி 6 வார்டுகள், அ.ம.மு.க., 3 வார்டுகள், மா.கம்யூ., 2 வார்டுகளிலும், வி.சி., கட்சி … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் … Read more

அமெரிக்க ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவம் பயிற்சி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் யவோரிவ்;ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்பதற்காக, அமெரிக்கா அனுப்பிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் உக்ரைன் ராணுவத்தினர் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர். கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைனை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘நேட்டோ’ அணியில் சேர்க்க ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் … Read more