தினமலர்
விஸ்வரூபம் எடுக்கும் பர்தா விவகாரம் ; காவி துண்டு அணிந்து வரும் மாணவர்கள்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களுரு-கர்நாடக கல்வி மையங்களில் முஸ்லிம் மாணவியர், ‘பர்தா’ அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி அம்மாநிலத்தின் பல பகுதிகளில் காங்., போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலடியாக பல கல்லுாரிகளில் ஹிந்து மாணவ – மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்புக்கு வந்ததால் பரபரப்பு நிலவுகிறது. விதிமுறைகர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், கடந்த மாதம் ஆறு முஸ்லிம் மாணவியர் பர்தா … Read more
இயக்குனருடன் சண்டை போட்டு வாய்ப்பு பெற்ற ஜனனி
எம்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் படம் கூர்மன். பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி உள்ளார். ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார், சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகை ஜனனி, இயக்குனரிடம் சண்டைபோட்டு இந்த படத்தின் வாய்ப்பை பெற்றதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் இயக்குனர் பிரையன் ஜார்ஜை, தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் … Read more
உலகை வென்றது இளம் இந்தியா; ஜூனியர் கிரிக்கெட் பைனலில் வெற்றி
ஆன்டிகுவா: ஜூனியர் உலக கோப்பை பைனலில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது இந்தியா. நேற்று நடந்த பைனலில் இங்கிலாந்தை 4 விக்கெட்டில் வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீசில், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 14வது சீசன் நடந்தது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் பிரஸ்ட், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ராஜ் அசத்தல் இங்கிலாந்து அணிக்கு ஜார்ஜ் … Read more
இந்தியாவின் முதல் விர்ச்சுவல் திரைப்படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்
இந்திய சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரானது. அதேபோல தற்போது விர்ச்சுவல் முறையில் ஒரு படம் முழுவதும் தயாராக இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி விர்ச்சுவல் முறையில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக ஹிந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் ஒரே … Read more
ஐ.நா., வில் இந்தியா வலியுறுத்தல்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்-‘மத வன்முறைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. நேற்று சர்வதேச மனித சகோதரத்துவ நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஐ.நா.,வில் நடந்த கூட்டத்தில், இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:தற்போது மதங்களுக்கு எதிராக புதிய அச்சம் தலைதுாக்கியுள்ளது. குறிப்பாக ஹிந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. இந்த அச்சுறுத்தல்களை ஐ.நா., கவனத்தில் கொள்ள … Read more
உண்மையாக காதலித்த ஜாக்குலினை விட்டுவிடுங்கள் : மோசடி மன்னன் வேண்டுகோள்
பல கோடி மோசடியில் ஈடுபட்டு தற்போது சிறையில் இருப்பவர் இடைத்தரகரும் மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர். 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியானது. இதனால் மோசடி வழக்கை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர் ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் டில்லி திஹார் சிறையில் இருக்கும் … Read more
புவி வெப்பமயமாதலால் உருகும் எவரெஸ்ட் சிகரம்;- ஆய்வு தகவல்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காட்மண்டு: புவி வெப்பமயமாதலால் எவரஸ்ட் சிகரம் உருகி வருவதாக ஆய்வு தகவல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலகின் உயரிய சிகரங்களில் உயரம் குறைந்து வருவதும் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.முன்னதாக அண்டார்டிகாவில் ராட்சத மலை ஒன்று இரண்டாகப் பிளந்து தனியாக கடல் பரப்பின்மீது மிதந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தற்போது நேபாளத்தில் உள்ள உலகின் உயரமான … Read more
டில்லியில் பள்ளிகள் திறக்க அனுமதி| Dinamalar
புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்பது முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கார்களில் பயணிப்போர், முக கவசம் அணியத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. … Read more
அரசுக்கு நிலம் வழங்கிய அடூர் கோபாலகிருஷ்ணன்
இந்தியாவிலேயே 16 தேசிய விருதுகள் பெற்ற ஒரே இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். குறைந்த படங்களே இயக்கி இருந்தாலும் அத்தனையும் விருதுகளை குவித்த படங்கள். எலி பத்தாயம், நாலு பெண்ணுகள், சுயம்வரம், மதிலுகள் உட்பட பல புகழ்பெற்றத் படங்களை இயக்கியுள்ளார். கேரள அரசு தற்போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதனால் தேவைக்கு அதிகமாக நிலம் உள்ளவர்கள், அந்த நிலத்தை ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்காக வழங்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி … Read more