டைகர் படத்தில் வில்லனாக உருவெடுத்த பி .வாசுவின் மகன் சக்தி

பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் 2007-ல் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்த சக்திக்கு பின்னர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் டைகர் என்ற படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சக்தி . இயக்குனர் முத்தையாவின் திரைக்கதை, வசனத்தில் … Read more

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 2020ல் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை மீறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சாலை ஒன்றில் குடித்து, கும்மாளமிட்டுள்ளார். அவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் ஒன்றரை ஆண்டுகளாக ஆறு முறை இதுபோல சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து லட்சுமி, அவரது நண்பர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தொடரப்பட்ட வழக்கில் லட்சுமிக்கு, 10 வாரங்களும், ரவீந்திரனுக்கு எட்டு வாரங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

2.30 லட்சம் பேர் நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,30,814 பேர் நலம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,20,80,664 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,30,814 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,02,47,902 ஆனது. தற்போது 13,31,648 பேர் … Read more

சுந்தர்.சி படத்தில் இணைந்த ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் மற்றும் காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் குதிரை, ஆலிஸ் என அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய்யை வைத்து சுந்தர். சி இயக்கி வரும் புதிய படத்திலும் ரைசா வில்சன் இணைந்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா சர்மா போன்ற நடிகைகள் … Read more

அமெரிக்காவில் வள்ளுவர் தெரு உதயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது.திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு. தற்போது திருவள்ளுவரை … Read more

தெய்வ சங்கல்பம் என்ற பெயரில் புதிய திட்டம்

பெங்களூரு-”பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் கர்நாடகாவில் கோவில்களை மேம்படுத்துவதற்காக, ‘தெய்வ சங்கல்பம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். முதல் கட்டமாக 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ வகுக்கப்பட்டுள்ளது,” என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, பெங்களூரு விகாஸ் சவுதாவில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:கர்நாடகாவில் அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் … Read more

எழுபதுகளின் அமிதாப் அல்லு அர்ஜுன் : புகழும் டப்பிங் கலைஞர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்த படம் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இந்தியில் வெளியான புஷ்பா படத்தை பார்த்துவிட்டு அல்லு அர்ஜுனுக்கு டப்பிங் பேசியவரின் குரல் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறது என பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல டப்பிங் கலைஞரான ஸ்ரேயாஸ் தல்பாடே. இதுபற்றி ஸ்ரேயாஸ் தல்பாடே கூறும்போது, “ஒரு ஹீரோவுக்கு டப்பிங் பேசியதற்காக … Read more

ஆங் சான் சூச்சி மீது 11 வழக்கு

நைபிடாவ்:மியான்மரில் கடந்த, 2021 பிப்.,1ல் ராணுவ புரட்சி நடந்தது. ஜனநாயக தேசிய லீக் அரசை அகற்றி விட்டு ராணுவம் ஆட்சி அமைத்தது. இதையடுத்து ஜனநாயக தேசிய லீக் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ராணுவம் அடக்கியது. அத்துடன், ஆங் சான் சூச்சி மீது, அரசு ரகசியங்களை வெளியிட்டது உட்பட பல வழக்குகள் தொடரப்பட்டன.இதில் கொரோனா பரவல் தடுப்பு விதிமீறியது, அனுமதியின்றி … Read more