தினமலர்
ரூ.13.14 கோடிக்கு சொகுசு கார் வாங்கினார் முகேஷ் அம்பானி| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ அதிபரும், நாட்டின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானி, 13.14 கோடி ரூபாய் மதிப்பில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ காரை வாங்கி உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவன கார்களை வைத்திருப்பது உலக பணக்காரர்கள் மத்தியில் கவுரவ சின்னமாக கருதப்படுகிறது. இதில், பல்வேறு மாடல் கார்கள் உள்ளன. இந்த வரிசையில், ‘ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்’ என்ற வகை கார் 2018ல் அறிமுகமானது. … Read more
சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் ஆக மாறிய ரஜிஷா விஜயன்
தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அந்த படத்தில் கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண கிராமத்து பெண்ணாக நடித்தவர், அதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் சமூக சேவகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள கீடம் என்கிற படத்தில் சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட்டாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன். ஏற்கனவே கோகோ வீராங்கனையாக ரஜிஷா நடித்த கோக்கோ என்கிற படத்தை இயக்கிய ராகுல் … Read more
அமெரிக்க பஸ்சில் துப்பாக்கிச்சூடு பெண் பலி; நான்கு பேர் காயம்| Dinamalar
ஓரோவில்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில், 43 வயது பெண் உயிரிழந்தார்; நான்கு பேர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் கிரேஹோண்ட் என்ற இடத்தில் இருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற பஸ், ஓரோவில் அருகே வந்தது. அப்போது, 21 வயது இளைஞர் ஒருவர், பயணியர் மீது திடீரென சுடத் துவங்கினார். இதில், 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார்; கர்ப்பிணி உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து வந்த … Read more
அந்த நிலை பொக்கிஷம் – அமலா
தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள படம் ‛கணம்'. ஷர்வானந்த், ரீத்து வர்மா, அமலா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகார்த்திக் இயக்கி உள்ளார். அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. 'கணம்' படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் … Read more
இந்திய ராணுவ தளபதி சொல்வது சரியல்ல:பாக்.,| Dinamalar
இஸ்லாமாபாத்:காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தம் தொடர்பாக இந்திய ராணுவ தலைமை தளபதி திசை திருப்பும் வகையில் பேசியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது.கடந்த, 2021 பிப்.,ல் காஷ்மீர் அருகே எல்லை கட்டுப்பாடு கோட்டில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக இந்தியா – பாக்., இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.இது குறித்து ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே கூறும்போது, ”இந்தியா வலிமையாக உள்ள காரணத்தால் நம் கொள்கைப்படி போர் நிறுத்தப் பேச்சு நடத்தப்பட்டு வெற்றிகரமாக அமலில் உள்ளது,” என்றார்.இதை மறுத்து பாக்., ராணுவ … Read more