கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம்

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருவதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் டீசரையும் வெளியிட்டிருந்தார்கள். சமீபத்தில் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியா பதிவு ஒன்றில் எல்லா மாஸ் கமர்சியல் படங்களின் டிரைலர்களுமே ஒரே மாதிரியான டிரைலர்கள் தான்.. … Read more

மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான்

ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. கடந்த வருடம் கடைசியாக வெளியான 'டங்கி' எமோஷனல் படமாக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ஷாரூக்கான் முழுக்க முழுக்க நெகட்டிவ் கேரக்டரில் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார். இப்படத்திற்கு 'கிங்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சர்வதேச படமாக உருவாக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் ஷாரூக்கான் மகள் சுஹானா … Read more

ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன்

நடிகை ஸ்ருதிஹாசன் இரண்டு, மூன்று காதல்களை கடந்து வந்தவர். கடைசியாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அவ்வப்போது, சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்து வந்தார் ஸ்ருதிஹாசன். இருவரும் பார்ட்டி, பங்ஷன்களில் ஜோடியாக சுற்றி வந்தனர். இருவரும் பிரிந்து விட்டதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனை இருவருமே மறுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன், … Read more

ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு'

நடன இயக்குனர்கள் நடிப்பில் ஆர்வம் காட்டும் காலம் இது. அந்த வரிசையில் தினேஷ் மாஸ்டரும் தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டுகிறார். 'ஒரு குப்பை கதை' படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு நாயே பேயே, சம்பவம், லோக்கல் சரக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் படம் 'நின்னு விளையாடு'. இந்த படத்தை ராஜ் பீக்காக் மூவிஸ் சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்கிறார். மலையாள நடிகை நந்தனா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் மலையாளத்தில் … Read more

சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே மற்றொரு டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கடேஷ் பட் தான் ஜட்ஜாக வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் காப்பி வெர்ஷன் போல தயாராகும் இந்நிகழ்ச்சியிலும் காமெடிக்காக கோமாளிகள் வரவுள்ளனராம். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலுவும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செலிபிரேட்டியாக … Read more

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா – எப்போது ஒளிபரப்பு

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மக்களை மகிழ்வித்து வரும் கலைஞர்களை விருது வழங்கி கவுரவித்தும் வருகிறது. சமீபத்தில் ஜீ தமிழ் விருதுகள் நடந்து முடிந்தன. அடுத்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் சிறப்பான தருணங்களை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்தது. மிகபிரம்மாண்டமாக செட்டில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நம்பர் … Read more

கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ்

2024 கோடை விடுமுறையைப் பொறுத்தவரையில் மே மாதத்தை மட்டும்தான் முழுமையான விடுமுறை மாதம் என சொல்ல முடியும். கடந்த மாதம் பள்ளித் தேர்வுகள், தேர்தல் என சினிமாவுக்கான ஆர்வம் நிறையவே குறைந்திருந்தது. தமிழ்ப் புத்தாண்டுக்குக் கூட குறிப்பிடும்படியான படங்கள் வெளியாகவில்லை. ஏப்ரல் மாதம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் மே மாதம் ஆரம்பமாகிறது. இந்த வாரம் வெளியாகும் படங்கள் இந்த விடுமுறை நாளை நன்றாகவே கொண்டாட வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மே 3ம் தேதி 'அரண்மனை … Read more

ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2022-ல் கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான படம் '777 சார்லி'. ஒரு நாய்க்கும் ஒரு இளைஞனுக்குமான பிணைப்பும் அவர்களது இலக்கில்லாத பயணமும் தான் இந்த படத்தின் கதையாக உணர்வுப்பூர்வமாக சொல்லப்பட்டிருந்தது. இந்த படத்தை கிரண்ராஜ் என்பவர் இயக்கி இருந்தார். பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கன்னடத்தில் வெளியான இந்த படம் கேஜிஎப், காந்தாரா படங்களை தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வருடம் சிறந்த கன்னட படத்திற்கான தேசிய … Read more

ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? – காரணம் என்ன?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஓவியக் கலைஞர் சாந்தனு ஹசரிகா என்பவருடன் மும்பையில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர்கள் இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒருவர் மற்றொருவரை 'அன்பாலோ' செய்த பின்புதான் இது தெரிய வந்துள்ளது. சாந்தனு ஹசரிகாவைப் பிரிவதற்கு முன்பாக 2019ம் ஆண்டில் லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞரான மைக்கேல் கோர்சேல் என்பவரைப் பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பிரிவதற்கு … Read more

எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா

ஹிந்தியில் சைத்தான் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தற்போது ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக உடற்பயிற்சியில் தீவிரம் காட்டி வந்த ஜோதிகா, தற்போது எவரெஸ்ட் மலை சிகரத்திற்கு டிரக்கிங் சென்றுள்ளார். அது குறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எவரெஸ்ட் சிகரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று அடைவது மற்றும் மின்சார வசதி இல்லாத இடங்களில் தங்கி இருப்பது, சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவது, பனிமழையில் நனைவது, உயரமான இடத்தில் அமைந்திருக்கும் … Read more