போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால்

கடந்த ஆண்டு தனது காதலர் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலாபால். அதையடுத்து, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தவர், அடுத்தடுத்து தனது புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடந்தது. இந்த நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த சமயத்தில் கர்ப்பிணிகள் நடத்தும் போட்டோசூட்டை அமலாபாலும் நடத்தி உள்ளார். சிகப்பு நிற ஆடையில் சற்றே கிளாமரான மாடர்ன் உடையணிந்து … Read more

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் – சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அண்மையில் கணவனும் மனைவியுமாக அளித்த பேட்டியில், 'எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது. மூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தை கன்பார்ம் ஆகும் வரை இருவரும் பயந்து கொண்டிருந்தோம். ரிசல்ட் பாசிட்டாவாக வந்த உடன் மருத்துவமனையிலேயே அழுதுவிட்டேன். எங்களுக்கு … Read more

அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார்

தங்கலான் படத்தை அடுத்து தற்போது அருண்குமார் இயக்கும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளில் வெளியானது. அப்போது வெளியான போஸ்டரில், இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த போஸ்டருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், சமீபகாலமாக … Read more

வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? – புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி

மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி குணச்சித்திர மற்றும் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்த இவர் அந்த படம் குறித்தும் விஜய் குறித்தும் கிண்டலாக பேசி சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் வில்லனாக நடித்து வரும் ஷைன் டாம் சாக்கோ இந்த வருடம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது ஜூனியர் என்டிஆருடன் … Read more

100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி வரும் இதில் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக பல இடங்களில் நடைபெற்று வந்தது. அதேசமயம் ரஜினிகாந்தின் 171வது படமான கூலி குறித்து புதுப்புது அப்டேட்டுகள் வெளியானாலும் வேட்டையன் குறித்த தகவல்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த … Read more

நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பின்னர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பம், வழக்கு போன்றவற்றால் கட்டட பணிகள் பாதியில் நின்றன. சமீபத்தில் இந்த பணிகள் மீண்டும் துவங்கி உள்ளன. இதற்கு நிதி திரட்டும் பணிகளும் நடக்கின்றன. நடிகர்கள் கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி வழங்கினர். சிவகார்த்திகேயன் 50 லட்சம் கொடுத்துள்ளார். இப்போது நடிகரும், சங்கத்தின் முன்னாள் துணை தலைவருமான நெப்போலியன் தன் பங்கிற்கு ரூ.1 … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர்

மும்பையை சேர்ந்த அதிதி பொஹங்கர், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். 'லால் பஹாரி' என்ற மராட்டிய படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு ஷீ, ஆஷ்ரம் என்ற வெப் தொடர்கள் மூலம் புகழ் பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு 'ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்' என்ற படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, ரெஜினா ஆகியோர் மற்ற 3 ஹீரோயின்கள். இந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்த அதிதி தற்போது கவின் … Read more

பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம்

கடந்த வருடம் சமந்தா நடிப்பில் சாகுந்தலம் மற்றும் குஷி என இரண்டு படங்கள் தெலுங்கில் வெளியாகின. இதில் குஷி ஓரளவு டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சமந்தாவின் 37வது பிறந்த நாளான நேற்று அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மா இன்டி பங்காரம் என இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ல் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பங்காரம் என்கிற படத்தின் டைட்டிலை மீண்டும் … Read more

இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'

மலையாள சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் அதன் கதை, திரைக்கதை உருவாக்கத்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று விடும். அப்படி சமீபத்தில் வெற்றி பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி வெளியாகி கேரளம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில் வசூலில் சக்கைபோடு போட்டது. சுமார் 20 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம், உலகளவில் 235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொடைக்கானல் குணா குகையில் விழுந்தவரை, நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்ற உண்மை … Read more

மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார்

முன்னணி ஹிந்தி தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண முகர்ஜி. கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சி துறையில் இருக்கிறார். நாகினி 3 உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 'சுப் ஷகுன்' தொடரில் நடித்தபோது அதன் தயாரிப்பாளரால் தான் துன்புறுத்தப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: எனது மனதில் இருக்கும் விஷயங்களை பற்றி சொல்ல எனக்கு இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை. ஆனால் இன்று நான் … Read more