ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர்கான். சில அற்புதமான ஹிந்தித் திரைப்படங்களையும் தயாரித்தவர். சமீபத்தில் பிரபல ஷோவான கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். “ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக … Read more

பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு… 21 வயதில் தேசிய விருது… 37 வயதில் மரணம்

'மாலையில் யாரோ மனதோடு பேச…' என தமிழ் ரசிகர்களின் இதயத்தில் ஆனந்தத்தையும், கண்களில் ஆனந்த கண்ணீரையும் ஒரே நேரத்தில் வரவழைத்தவர் பின்னணி பாடகி சொர்ணலதா. 'போவோமா ஊர்கோலம்' என உற்சாகம் தந்தார். 'ஆட்டமா தேரோட்டமா' என்று பாடி ஆட வைத்தார், 'போறாளே பொண்ணுத்தாயி' என கதற வைத்தார். 'ராக்கம்மா கையைத்தட்டு' எனச் சொடக்குப்போட வைத்தார். ஆனால் சொடக்கு போடும் நேரத்தில் இந்த உலகை விட்டும் பறந்தார். ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்த சொர்ணலதா 14 … Read more

'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்?

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த கதாநாயகர்களின் வரிசையில் இடம் பெற்றவர் கவின். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'டாடா' படம் நல்ல விமர்சனத்தையும், குறிப்பிடத்தக்க வரவேற்பையும் பெற்றது. அவர் தற்போது நடித்து வரும் 'ஸ்டார்' படத்திற்கு வெளியீட்டிற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மே 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான வியாபாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஏழு … Read more

மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு

எஸ்யு அருண்குமார் இயக்கத்தில், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வீர தீர சூரன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்து அப்டேட்டைக் கொடுத்து வருகிறார் படத்தின் கதாநாயகன் விக்ரம். மதுரை அடுத்த மேலூரில் உள்ள கல்லம்பட்டி என்ற கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சுமார் 10 நாட்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படப்பிடிப்பின் … Read more

சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?

சினிமா பிரபலங்கள் பலரும் கார்கள் மீது தீராத ஆசை வைத்துள்ளவர்கள். உலகில் உள்ள பிரபலமான பிராண்ட் கார்களை வாங்குவதில்தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒரே ஒருவர் பயணிக்க ஒரு கார் போதுமே என நாம் நினைப்போம். ஆனால், சினிமா பிரபலங்கள் நான்கைந்து விலை உயர்ந்த கார்களை வாங்கி சும்மாவே நிறுத்தி வைத்திருப்பார்கள். பிரபல நடிகையான சமந்தா வைத்துள்ள கார்கள் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவரிடம் மொத்தம் 6 கார்கள் உள்ளதாம். மூன்று கோடி … Read more

ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய சேவை … Read more

விஜய் – அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது!

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததை அடுத்து, மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த பில்லா மற்றும் தீனா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் ஹிட் படங்களும் வெளியாக உள்ளன. அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், … Read more

பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அவரது 12வது படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி இருக்கிறார் அனிருத். கவுதம் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. மேலும், இந்த படம் கைதி படத்தைப்போன்று விறுவிறுப்பான கதையில் உருவாவதால், கதையின் வேகத்தை குறைத்து விடும் என்பதற்காக பாடல்களே … Read more

விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல்

மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கின்றன. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், … Read more

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது

பாலிவுட் நடிகர் சஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாஹில் கான் 'தி லோட்டஸ் புக் ஆப்'-ல் பங்குதாரராகவும் உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சாஹில் கானின் ஜாமின் மனுவை மும்பை … Read more