ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ!

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகின்றார். தெலுங்கு படங்களை தொடர்ந்து கடந்த வருடத்தில் விஜயை வைத்து தமிழில் முதல் முறையாக 'வாரிசு' என்கிற படத்தை தயாரித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு, தமிழ் படங்களை தொடர்ந்து இப்போது ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் படத்தை தயாரிக்க களம் இறங்குகிறார். இந்த படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிக்க முதற்கட்டமாக சாஹித் கபூர் … Read more

முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர்

‛சீதா ராமம்' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: காதல் போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கு வசதியாக இல்லை. நான் பயப்படுவேன். அதை எனது பெற்றோரும் ஏற்கவில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க விரும்பிய போது, அதில் முத்தக் காட்சி சம்பந்தப்பட்டிருந்ததால் நான் விலக வேண்டியிருந்தது. ஒரு நடிகராக, நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் சில நேரங்களில் அது படத்திற்கு தேவையாக இருக்கும். உங்களுக்கு … Read more

சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ராமம் ராகவம்'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தந்தை, மகன் உறவின் பின்னணியில் உருவாகி உள்ளது. தந்தையாக சமுத்திரக்கனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சமுத்திரகனி பற்றி பேசியதாவது: சமுத்திரகனியோட மாபெரும் ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய … Read more

ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்'

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் டிரண்ட் இப்போது தொடங்கினாலும் ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டர்ஸ்டெல்லர்' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் வகையில் வருகிற, செப்டம்பர் மாதம் 27ம் தேதி படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பாராமவுன்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்திருந்தனர். பூமி, மனிதர்கள் … Read more

கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்!

நடிகர் கவின் தற்போது ஸ்டார், கிஷ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து புதுமுக இயக்குனர் விக்ரனன் அசோகன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என சமீபத்தில் தகவல் வெளியானது. கூடுதலாக இப்படத்தில் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்குகிறது என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம்

2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற தெலுங்கு படம் 'சினிமா பன்டி'. இப்படத்தின் இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'பரதா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கவனம் பெற்ற தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோபி சுந்தர் படத்துக்கு இசையமைக்கிறார். மிருதுள் சுஜித் ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்தா மீடியா சார்பில் பாக்யலட்சுமி போசா தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்த … Read more

இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி

பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 'ராமாயணம்'. இந்த படம் 3 பாகங்களாக வெளிவருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். நிதிஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள அரண்மணை ஒன்றில் நடந்தது. இது டெஸ்ட் ஷூட் என்றும் கூறப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடித்தார்கள். இந்த படப்பிடிப்பு படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது. படப்பிடிப்பில் செல்போன்களை கொண்டு வரவும், … Read more

அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி

தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ராமம் ராகவம்'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தந்தை, மகன் உறவின் பின்னணியில் உருவாகி உள்ளது. தந்தையாக சமுத்திரகனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். ஹீரோயினாக கோல்கட்டா நடிகை மோக்ஷா நடித்துள்ளார். பிருத்தவி போலவரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலா, சூரி, தம்பி ராமய்யா, பாபி சிம்ஹா, தீபக், ஹரீஷ் குமார், பாண்டிராஜ் என்.கே.ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து … Read more

புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக இலவச தங்கும் விடுதி ஒன்றை நடத்துவதோடு, அவர்களை விளையாட்டு மற்றும் கலைத்துறையில் வளர்த்து வருகிறார். தனது தாயாருக்கும், ராகவேந்திரருக்கும் கோவில் கட்டி உள்ளார். இந்த நிலையில் 'மாற்றம்' என்ற புதிய அமைப்பு ஒன்றை தொடங்க உள்ளார். இது வருகிற மே 1ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அமைப்பை ராகவா லாரன்ஸால் … Read more

அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த 2019ம் ஆண்டு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கிவந்த, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 300க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய எல்லைக்குள், பாகிஸ்தான் விமானப்படையின் எப்16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது … Read more