சவால் தான்… ஆனாலும் மகிழ்ச்சியே… – தமன்னா

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள். அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், … Read more

பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – தாமிரபரணிமதியம் 03:30 – வீரம்மாலை 06:30 – … Read more

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு சமீபத்தில் வெளியாகி வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில், இரண்டாவது பாடல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் … Read more

அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பின் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா, பஹத் பாசில் என முதல்பாகத்தில் நடித்த நடிகர்களே இதிலும் நடிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிசாத் இசையமைக்கிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் அல்லு … Read more

நெல்சன் – விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ?

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாகவும் 2026 தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் 69வது படம் தான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை யார் இயக்குகிறார்கள் என இப்போது வரை பல பெயர்கள் யூகமாக சொல்லப்பட்டு வருகிறதே தவிர இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த … Read more

மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு

கேரளாவில் பிறந்து வளர்ந்தாலும் மலையாள திரை உலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறியவர் வித்யாபாலன். தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் வித்யாபாலன் மலையாளத்தில் அவ்வப்போது வெளியாகி வரவேற்பு பெரும் படங்கள் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று அவர் கடந்த வருடம் மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் : தி கோ என்கிற படத்தைப் பற்றியும் அதில் மம்முட்டியின் நடிப்பு … Read more

சிவசக்தியாக உருமாறிய தமன்னா

தெலுங்கில் கடந்த 2022ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒடேலா ரயில்வே ஸ்டேஷன். இந்த படத்தில் இரண்டாம் பாகமாக தற்போது 'ஒடேலா 2' என்கிற படம் தயாராகிறது. . இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். முதல் பாகத்தில் பூஜிதா பொன்னாடா, ஹெபா படேல் என பெரிய அளவில் பிரபலம் இல்லாத கதாநாயகிகள் நடித்திருந்த நிலையில் இந்த படம் எதிராபாராத விதமாக வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் பெரிய ரீச் கிடைக்கும் விதமாக தமன்னாவை ஒப்பந்தம் … Read more

கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் ஆவேசம்' என்கிற படம் வெளியானது. ஒரு கேங்ஸ்டர் காமெடி படமாக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 100 கோடி வசூலையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரோமாஞ்சம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜித்து மாதவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவரது இரண்டு படங்களிலுமே கதாநாயகிகள் என யாருமே இல்லை. அதேபோல இந்த ஆவேசம் படத்தில் … Read more

சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகி, இதன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பர்களில் ஒருவராக அவரது வலதுகரமாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட … Read more

'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, திஷா பதானி, அமிதாப்பச்சன் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரத கதையை தழுவி சயின்ஸ் பிக்ஷன் கலந்த பிரமாண்ட படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. இப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் மே மாதம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், படத்தின் வசூல் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். எனவே, படம் … Read more