ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்புப்பணிகள் தீவிரம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் கோட்பூட்லி நகர் அருகே சரூந்த் கிராமம் உள்ளது. அங்குள்ள விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 150 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் திறந்து கிடந்துள்ளது. இந்தநிலையில் அங்கு விளையாடி கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராடி வருகிறார்கள். தினத்தந்தி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அபார வெற்றி

கொச்சி, 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் எட்மில்சன் ஆட்டத்தின் 5 மற்றும் 12-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சார்பில் கில்லர்மோ ஆட்டத்தின் 18 மற்றும் … Read more

ஜெர்மனி: பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்த இந்தியர்களில் 3 பேர் வீடு திரும்பினர்

புதுடெல்லி, ஜெர்மனியில் மக்திபர்க் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சந்தை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சந்தையில் கடந்த 20-ந்தேதி இரவு குவிந்த மக்கள், பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றில் விரைவாக வந்த நபர் ஒருவர் அதனை கூட்டத்திற்குள் செலுத்தினார். இதனால், மக்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் படுகாயமடைந்து … Read more

புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் வெற்றி

புனே, 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், 3 முதல் 6-வது இடங்களை பெறும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெறும். இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 45-31 … Read more

ரூ.5 ஆயிரம் கோடி செலவில் அமேசான் நிறுவன தலைவரின் திருமணம்… உண்மை என்ன?

வாஷிங்டன், உலக அளவில் ஆன்லைன் வழியே பொருட்களை விற்பனை செய்வதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இதன் தலைவர் ஜெப் பெசோஸ். இவர் லாரன் சாஞ்சஸ் என்பவரை 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டேட்டிங் செய்து வருகிறார். அவருடன் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி வருகிறார். இந்நிலையில், இவர்கள் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து, கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயமும் நடந்து முடிந்தது. இதனால், அவர்கள் இருவரும் … Read more

காலிஸ்தானிய பயங்கரவாதி லண்டாவின் முக்கிய உதவியாளர் கைது; என்.ஐ.ஏ. நடவடிக்கை

புதுடெல்லி, வெளிநாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பப்பர் கல்சா இன்டர்நேசனல். இதனை தோற்றுவித்தவர் லக்பீர் சிங் என்ற லண்டா. காலிஸ்தானிய பயங்கரவாதியான இவருடைய நெருங்கிய கூட்டாளி பசிதர் சிங் என்ற பவிதர் படாலா. லண்டா மற்றும் படாலாவின் முக்கிய உதவியாளராக இருந்தவர் ஜதீந்தர் சிங் என்ற ஜோதி. பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் பகுதியில் வசித்து வந்த அவரை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு கழக (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது … Read more

பும்ரா பந்துவீச்சை அப்படி எதிர்கொள்ள கூடாது – ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

மெல்போர்ன், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் … Read more

நைஜீரியாவில் உணவு பொட்டலம் வாங்க முண்டியடித்து சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

அபுஜா, ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் அங்கு பட்டினியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தநிலையில் அனம்ப்ரா மாகாணம் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அன்னதானத்துக்கு தன்னார்வ அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. இதனை பெறுவதற்காக ஏராளமானோர் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியாகினர். இதேபோல் தலைநகர் அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு … Read more

என்.எச்.ஆர்.சி. தலைவராக முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமனம்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராமசுப்ரமணியன். அவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி.) தலைவராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நியமித்து உள்ளார். இதேபோன்று, பிரியங்க் கனூங்கோ மற்றும் நீதிபதி பித்யுத் ரஞ்சன் சாரங்கி (ஓய்வு) ஆகியோர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தகவலை ஆணையம் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ளது. சென்னை சட்ட கல்லூரியில் சட்டம் படித்தவரான ராமசுப்ரமணியன், 1958-ம் … Read more

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

புனே, 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், 3 முதல் 6-வது இடங்களை பெறும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கும் தகுதி பெறும். இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி … Read more