மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

புதுடெல்லி, மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 18 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் 2-வது நாளாக நேற்றும் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர … Read more

உக்ரைன்: இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் ரஷியா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷியா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் உள்ள குசும் (Kusum) என்ற மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை வீசி தாக்கியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக கூறி வரும் … Read more

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா ஆவணி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. விவசாயியான இவர் தனக்கு சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் சினையாக இருந்த அந்த பசுமாடு நேற்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டியை பார்த்து விவசாயி எல்லப்பா ஆச்சரியம் அடைந்தார். அதாவது அந்த கன்றுக்குட்டி 2 தலைகள், 4 கண்களுடன் இருந்தது. இதுபற்றி அவர் உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கால்நடை டாக்டர், அங்கு … Read more

மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்-மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்குவங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் எனது உண்மையான வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். மதத்தின் பெயரால் எந்த வன்முறையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. அரசியலுக்காக கலவரத்தைத் தூண்ட வேண்டாம். கலவரத்தைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். அவர்கள் மீது கடும் … Read more

தென்கொரியா: சுரங்கப்பாதை இடிந்து விபத்து – மீட்புப்பணிகள் தீவிரம்

சியோல், தென்கொரியாவின் தலைநகர் சியோலில் வங்மயோங் என்ற நகரம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சுரங்கப்பாதை இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சுரங்கப்பாதை பணியை மேற்கொண்ட 2 ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும்போது அருகே உள்ள கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பெரும்பாலான ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு புறப்பட்டுள்ளனர். அப்போது திடீரென … Read more

லாரியில் இருந்து குதித்து… சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தமிழரின் பரபரப்பு பேட்டி

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வீடுகளுடன் கூடிய வர்த்தக கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்நிலையில், இதுபோன்ற கட்டிடம் ஒன்றில் அமைந்த பள்ளியில் கடந்த 8-ந்தேதி திடீரென தீப்பற்றி கொண்டது. இந்த பள்ளியிலேயே ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரியான, நடிகர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் பவனோவிச் (வயது 8) படித்து வருகிறார். சமையல் கலையை கற்று தரும் அந்த பள்ளியில் திடீரென தீப்பிடித்து கொண்டதும் குழந்தைகள் பயத்தில் அலறினர். இந்நிலையில், பாதுகாப்பு கவசம், ஆடை உள்ளிட்ட எதுவுமின்றி அவர்களை … Read more