வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு

புதுடெல்லி, பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர், ஒரு தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 கோடியே 49 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மிரட்டினார். இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு தொழில் அதிபர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, ஐகோர்ட்டு சி.பி.ஐ.க்கு மாற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு … Read more

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 பேர் கைது

சென்னை, ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை … Read more

அமெரிக்காவில் இருந்து 4 நாட்டவர்களை வெளியேற்றும் உத்தரவு நிறுத்திவைப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் வசித்து வரும் கியூபா, வெனிசூலா, நிகராகுவா மற்றும் ஹைத்தி மக்களை வெளியேற்றும் வகையில் அவர்களுக்கான சட்ட பாதுகாப்புகளை ரத்து செய்து 30 நாட்களில் அவர்களை வெளியேற்றப்போவதாக கடந்த மாதம் டிரம்ப் அறிவித்தார். இந்த காலக்கெடு வருகிற 24-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பாஸ்டனில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா தல்வானி, டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே அமெரிக்காவில் … Read more

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுடெல்லி, பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கும், அளப்பரிய சாதனைகள் செய்தவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி வழங்கப்பட வேண்டிய பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மற்றவர்களுக்காக பரிந்துரைகளும் அனுப்பலாம். ராஷ்டிரீய புரஸ்கார் வலைத்தளத்தில் உள்ள படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, 800 வார்த்தைகளுக்கு மிகாமல் பாராட்டு பத்திரமும் … Read more

கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும்-டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி, பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி … Read more

சென்னைக்கு எதிரான வெற்றி …கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியது என்ன ?

சென்னை, ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அடித்தது. சென்னை தரப்பில் துபே 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் எல்லையோர மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கைபர் பக்துங்க்வா மாகாணம் லோயர் டிர் பகுதியில் ராணுவத்தால் மிகவும் தேடப்படும் குற்றவாளியான ஹபீசுல்லா என்ற பயங்கரவாதி ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டைமர்கரா என்ற இடத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஹபீசுல்லாவை ராணுவ வீரர்கள் விரட்டிச் சென்றனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் … Read more

புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ.பன்னீர்செல்வம்..? வெளியான தகவல்

புதுடெல்லி, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கட்சியின் சின்னத்துக்கு பங்கம் விளைந்த போது, தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கரம் கோர்த்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன் பிறகு கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதற்கிடையே கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி அமைத்து … Read more